04/06/2017

தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?


எப்பாடுபட்டாவது தமிழகத்தில் காலூன்றி விடவேண்டுமென்று பலவருடங்களாக காத்திருந்த காவி பயங்கரவாத கும்பலனா ஆர்,எஸ்.எஸ் மற்றும் அதன் அரசியல் பிரிவான பிஜேபிற்கு ஜெயலலிதாவின் இறப்பு ஒரு வழியை ஏற்படுத்திக் கொண்டுத்திருக்கிறது.

அதன்படி எப்படியாவது தமிழகத்தில் நுழைந்து தனது  அரசியலை நிறுவவும், அதே நேரத்தில்  தமிழகத்தில் வளங்களை தனது ’பனியா கும்பலுக்கு கொடுக்கவும் நினைக்கும் இந்த கும்பலின்  அரசியலுக்கு யாரெல்லாம் தடையாக  இருப்பார்களோ அவர்களை தங்களது பினாமி அரசான தமிழக எடப்பாடி அரசை வைத்து கைது செய்து மிரட்டும் எமர்ஜென்சி கால உத்தியை பயன்படுத்திவருகிறது.

இதன்படி தான் நினைவேந்தலை நடத்தினார்களென்று தோழர்கள் திருமுருகன், டைசன், இளமாறன் அருண்குமார் உள்ளிட்ட நால்வர் மீதும் போலியான வழக்குகளை காட்டி  குண்டர் சட்டம் போடப்பட்டதும், 17 தோழர்கள் மீது பொய் வழக்கு சிறையில் அடைத்ததும் நடந்தது.

மேலும் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக போராடினார்கள் என்று SDPI கட்சியை சேர்ந்த 17 தோழர்களையும் கைது செய்திருக்கிறது.

இத்தோடு நில்லாமல்  தமிழர் முன்னேற்ற படையை சேர்ந்த தோழர் ஒருவரின் மீது நேற்று குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது (இவர்கள் தான் தமிழர்களை தரக்குறைவாக பேசியதற்காக சமீபத்தில் ரஜினி வீட்டை முற்றுகையிட்டவர்கள்)..

இதுபோக நேற்று காவிரி டெல்டாவில் சட்ட விரோதமாக மீத்தேன் எடுக்கும் ONGC நிறுவனத்தை கண்டித்து அறவழியில் மக்களை திரட்டி போராடிய மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பை சேர்ந்த பேராசிரியர் ஜெயராமன் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

இப்படி அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை தமிழகத்தில் தனது பினாமி அரசான எடப்பாடி அரசை பயன்படுத்தி செய்து வருகிறது பிஜேபி.

தமிழர்கள் நாம் இதனை எதிர்த்து ஒற்றுமையுடன் போராடாவிட்டால்  மக்கள் பிரச்சனைக்காக போராடபவர்கள் அனைவரும் வருங்காலத்தில்  சிறையில் தான் இருக்க வேண்டும்.

தமிழகமே பாஜக வையும் அதன் பினாமி அரசையும் எதிர்த்து போராட வீதிக்கு வா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.