04/06/2017

வயிற்று வலியை குணப்படுத்தும் மாதுளை...


கோடைகாலத்தில் உடல் உஷ்ணம், சோர்வு, மயக்கம், நீர்வற்றிபோதல், சிறுநீர்தாரையில் எரிச்சல் போன்றவை ஏற்படும். இப்பிரச்னைகளை தீர்க்க மாதுளையை பயன்படுத்தி உடல் உஷ்ணத்தை போக்கும் சர்பத் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாதுளை, பனங்கற்கண்டு, எலுமிச்சை. பனங்கற்கண்டை சாறாக எடுத்து பாகுபதத்தில் கொதிக்க வைக்கவும். இதனுடன் மாதுளை சாறு, எலுமிச்சை சாறு சேர்க்கவும். ஆறவைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். தேவையானபோது, இதில் நீர்விட்டு குடித்துவர கோடைகாலத்தில் உடல் உஷ்ணம் தணியும். பித்தம் சமன்படும். குழந்தை இன்மையை போக்கும். வயிற்று வலி குணமாகும்.

மாதுளை உன்னதமான மருந்தாகிறது. பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது. நோய்களை தடுக்கவல்லது. குளிர்ச்சி தரக்கூடியது. மாதுளையின் தோலை பயன்படுத்தி வயிற்று வலி, வயிற்று கடுப்பை குணமாக்கும் மருந்து தயாரிக்கலாம். மாதுளையின் மெல்லிய தோலை எடுக்கவும். இதில் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர வயிற்று வலி, சீதபேதி குணமாகும்.

தாமரை பூவை பயன்படுத்தி வயிற்று வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தாமரை பூ இதழை பசையாக அரைத்து, அதை பெரிய நெல்லிக்காய் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது சந்தனப் பொடி, பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்துவர உடல் உஷ்ணம் தணியும். வயிற்று புண் ஆறும். வயிற்று வலி குணமாகும். செரிமானத்தை தூண்டும். உடல் உஷ்ணம், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், காய்ச்சல், வயிற்றுபோக்கு ஆகியவற்றுக்கு தாமரை இதழ் மருந்தாகிறது.

ஜவ்வரிசியை பயன்படுத்தி உடல் உஷ்ணம், வயிற்று வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி, வரமிளகாய், உப்பு, தயிர், நல்லெண்ணெய். ஜவ்வரிசியை லேசாக வறுத்து வெந்நீர் விட்டு சுமார் 5 மணி நேரம் ஊற வைக்கவும். ஜவ்வரிசியுடன் தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து எடுத்து வைக்கவும். பாத்திரத்தில் நல்லெண்ணெய், கடுகு, வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

இதை ஜவரிசி, தயிர் கலவையில் சேர்த்து கலக்கவும். இதை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறைந்து, குளிர்ச்சி அடையும். வயிற்று வலி குணமாகும். மரவள்ளி கிழங்கு வகையை சேர்ந்தது ஜவ்வரிசி. இது, குடலுக்கு நல்ல இயக்கத்தை கொடுக்கிறது. குளிர்ச்சி தரக்கூடியது. வயிற்று கடுப்பை தணிப்பதுடன், வயிற்றுப்போக்கை சரி செய்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.