21/06/2017

ரேசன் கடைகளில் இனி சர்க்கரை கிடையாது...


இன்று தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த டி ரவிந்திரன் தமிழ் இந்து நாளிதழில் எழுதிய கட்டுரையில், தமிழக கரும்பு உற்பத்தி 2006- 2005 ஆண்டில் 25.4 லட்சம் டன்னாக இருந்தது 20016-17 ஆண்டு 9.5 லட்சம் டன்னாக குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அதே வேலையில் தமிழகத்தில் உள்ள ஆலைகள் ஒரு நாளைக்கு 1.25லட்சம் டன் அறைவை திறன் உடையது என்றும் 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் சர்க்கரை நுகர்வு தேவை ஐந்து கோடி டன் என்றும் குறிப்பிடபட்டுள்ளது.

கரும்பு உற்பத்தி குறைந்ததற்கு வறட்சி ஒரு காரணமாக சொன்னாலும் முக்கிய மான காரணமாக இருப்பது விலையில் ஆலைகள் வழங்காத நிலுவைத் தொகையும் தான் முதன்மை காரணாம இருகிறது. கடந்த ஆண்டு சந்தித்த சேலம் மாவட்டத்தில் கரும்பு விவசாயத்தில் இருந்து வெளியேறி தென்னைக்கு மாறிய விவசாயிகள் முதன்மை காரணமாக இதை சொன்னார்கள்.

விவசாய பொருட்களின் உற்பத்தி செலவு மற்றும் விலை நிர்ணைய ஆணையம். கரும்பின் உற்பத்தி செலவாக ரூ. 2,240 நிர்ணயத்த பின்னும் கரும்பின் விலையை 2200 என்று மத்திய அரசு நிர்ணைக்கிறது என்றால் இந்த அரசின் நோக்கம் என்னவா இருக்கும் என்று நான் யோசிக்க வேண்டியுள்ளது.

தனியார் ஆலைகள் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய தொகை 2013இருந்து இன்று வரை 1418 கோடியாக இருக்கிறது,. அதே நேரத்தில் வ்லைிவ்கச்ளாய்க்கிகளுக்கு நிலுவை தொகை வழங்க 17000 கோடி வட்டியில்லா கடனை சர்கரை ஆலை முதளாலிகளுக்கு வழங்கியுள்ள அரசு விவசாயிகளுக்கு ஆலைகள்கொடுக்க வேண்டிய பணத்தை வாங்கி கொடுக்க வில்லை.

ஆலை உற்பத்தி செலவில் 10% பொது விநியோகத்திற்கு கொடுக்க வேண்டும் என்பதையும இவர்கள் நீக்கி உள்ளார்கள். ஆனால் சர்க்கரை ஏற்று மதிக்கு 4000 கோடி மானியத்தை முதளாலிகளுக்கு அரசு கொடுத்துள்ளது.

இங்கே சர்கரைக்கு மிக பெரிய சந்தை இருக்கும் போது அதற்கு கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உரிய விலையும் கொடுக்காமல், அவர்களுக்கு சென்று சேர வேண்டிய பணத்தையும் கொடுக்காமல் கரும்பு உற்பத்தில் இருக்கும்வி வசாயிகளை வெளியேற்ற திட்டமிடுகிறார்கள். அதே வேலையில் பொது வினியோகத்திற்கு நிறுவனங்கள் கொடுக்க வேண்டிய சர்க்கரை வாங்குவதையும் நிறுத்துகிறது. என்றால் ரேசன்கடைகளில் கொடுக்க படும் சர்கரை இனி நிறுத்த போகிறார்கள்,

ஐந்து கோடி டன் சர்கரை தேவை என்பது இறக்கு மதி செய்யும் சர்கரைக்கான சந்தை யாக மாற்றப்படும் போது பொது வினியோக முறையில் மானிய விலையில் கொடுப்பது எல்லாம் பெரு நிறுவனங்களின் சந்தையை பாதிக்கும் அல்லவா அந்த நிறுவனங்களுக்கு இடைஞ்சலாக பொது வினியோக முறை இருக்கும் என்பதாலேயே அவை நிறுத்த பட இருகின்றன.

இந்த நாட்டில் கரும்பு விவசாயத்தில் மூலம் வேலை வாய்ப்பை பெற்ற பல லட்சம் மக்கள் வேலையும் இழந்து குறைந்த பட்ச விலையில் கிடைத்த பொது விநியோக முறை உணவு பொருட்களும் இன்றி அவர்களை பஞ்சதில் தள்ள போகிறது இந்த அரசு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.