21/06/2017

தலித் என்ற போர்வையில் மதவெறியரை உள்ளே புகுத்தும் பாஜக...


அன்றே எச்ச ராஜா சொன்னா(ன்)ர், RSS ஐ சார்ந்தவரைதான் குடியரசு தலைவராக்குவோம் என்று. அதை இன்று நிறைவேற்றியும் காட்டியுள்ளது மதவெறி பிடித்த பாஜக..

யார் இந்த ராம்நாத் கோவிந்த்? சில அறிமுகம்...

இவரை தான் தற்போது ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கி இருக்கிறது பாஜக..

மதவெறி கொண்ட ஆட்சியில் மனிதாபிமானமுள்ளவர் ஜனாதிபதி வேட்பாளராக பாஜக களமிறக்கும் என்று நீங்கள் நம்பினால் நீங்கள் முட்டாளே..

2009 ம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ரங்கநாத் மிஷ்ராவின் தலைமையில் இந்தியா முழுக்க கள ஆய்வு மேற்கொண்டு யார் யாரெல்லாம் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளார்கள் என்பதை கண்டறிந்து உண்மை அறிக்கையை அன்றைய கடந்த காங்கிரஸ் அரசிடம் ஒப்படைத்தது இந்த ஆய்வுக்குழு.

அதன்படி சமூக ,பொருளாதார நிலையில் பின் தங்கிய சிறுபான்மையினருக்கு ( முஸ்லீம் 10 + இதர பிரிவு 5)  வேலைவாய்ப்பில் 15% இடஒதுக்கீடு வழங்கலாம் என பரிந்துரைக்கிறது.

இது குறித்து அன்றைய பாஜகவின் செய்தி தொடர்பாளாராக இருந்த ராம்தேவ் கோவிந்தாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப..

அவர் கூறியது பதில் இதுதான்...

என்னது இட ஒதுக்கீடா , முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் ஏலியன்கள். ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரைகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றார்..

அதற்கு செய்தியாளர்கள்..

சார், ரொம்ப பின் தங்கி இருந்தா கொடுக்கலாமே  என மீண்டும் கேட்க..

முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் சிறுபான்மையினர் என சொல்வது அரசியலமைப்புக்கு எதிரானது என்றார்.

அப்போ , சீக்கிய தலித்துகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதே என கேட்ட பொழுது ஏலியன்களுக்கு இட ஒதுக்கீடு ஏன் ? என்றார்..

இப்படி இஸ்லாமியர்களையும், கிருத்தவர்களையும் வெறுக்கும் ஒருவரைதான் அதாவது RSS ன் முழுநேர ஊழியரைதான் பாஜக குடியரசு தலைவர் வேட்பாளராக களமிறக்கியுள்ளது.

இப்படி இஸ்லாமியர்கள் கிருஸ்துவர்களுக்கு உள்ள இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் ஒருவர் நாளை
தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்யும் மனநிலை  உடையவர் தான்...

அன்றே எச்ச ராஜா சொன்னான் RSS ஐ சார்ந்தவரைதான் குடியரசு தலைவராக்குவோம் என்று..

அதை இன்று நிறைவேற்றியும் காட்டியுள்ளது மதவெறி பிடித்த பாஜக..

வெறுப்புணர்வு கொண்ட ஒருவர் எப்படி இந்திய நாட்டின் அனைவருக்குமான பொதுவானவராக இருக்க முடியும்?

இது பாஜக 2019 கான தேர்தலில் வெற்றி பெற தலித் வாக்குகளை குறிவைத்து தேர்வு செய்யபட்டவர்தான் இந்த தலித் குடியரசுத் தலைவர் நாடகம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.