07/06/2017

விடுதலை புலிகள் இயக்கத்தில் தமிழக இளைஞர்கள்...


ஏறக்குறைய 30,000 போராளிகள் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சற்றேறக்குறைய 200 தமிழக போராளிகள் இருந்தனர்..

அவர்களைப்பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. எனக்குக் கிடைத்தவரை சில தகவல்கள் தருகிறேன்.

வீரமரணம் அடைந்தோருக்கு புலிகள் வழங்கும் 'மாவீரர்' பட்டம் பெற்ற தமிழகத் தமிழர்களில் ஒரு கரும்புலி இரண்டு பெண் போராளிகள் உட்பட 14 பேரின் விபரங்கள்..

பிரிவு: கரும்புலி
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்:செங்கண்ணன்
இயற்பெயர்: தனுஸ்கோடி செந்தூர்
ஊர்: சாத்தூர், சிவகாசி(தமிழகம்)
வீரப்பிறப்பு: 25.01.1975
வீரச்சாவு: 11.11.1993
நிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: உமா
இயற்பெயர்: வேலுச்சாமி இந்துமதி
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 27.05.1972
வீரச்சாவு: 11.12.1999
நிகழ்வு: கிளிநொச்சி பரந்தன் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: மணியரசி
இயற்பெயர்: செல்லத்துரை கமலாதேவி
ஊர்: தமிழகம்.
வீரப்பிறப்பு: 02.02.1977
வீரச்சாவு: 19.04.1996
நிகழ்வு: யாழ்ப்பாணம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற
மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர்-2
நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: பத்மநாபன்
இயற்பெயர்: பி.பத்மநாபன்
ஊர்: திருச்சி, தமிழகம்.
வீரப்பிறப்பு: 27.07.1963
வீரச்சாவு: 16.03.1988
நிகழ்வு: தமிழகத்தின் திருச்சியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின்போது வீரச்சாவு

நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுனில்
இயற்பெயர்: கதிரவன்
ஊர்: தமிழகம்.
வீரச்சாவு: 11.04.1988
நிகழ்வு: முல்லைத்தீவு ஒட்டங்குளத்தில்
இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு

நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: இனியன்(றஸ்கின்)
இயற்பெயர்: முத்தையா இராமசாமி
ஊர்: தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 23.07.1962
வீரச்சாவு: 11.12.1991
நிகழ்வு: மன்னார் மருதமடு வேப்பங்குளம் பகுதியில்
சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: 2ம் லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: உதயசந்திரன்
இயற்பெயர்: சேதுபாணடித்தேவர்
ராமமணி சேகரன்மகாதேவர்
ஊர்: திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 05.05.1969
வீரச்சாவு: 09.06.1992
நிகழ்வு: மன்னார் சிறுநாவற்குளத்தில் சிறிலங்கா படையினர் மீதான அதிரடி தாக்குதலின் போது வீரச்சாவு

பிரிவு: கடற்புலி
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: ஈழவேந்தன்
இயற்பெயர்: துரைராசன் குமரேசன்
ஊர்: தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 25.05.1969
வீரச்சாவு: 20.11.1992
நிகழ்வு: தமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவு
துயிலுமில்லம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: சச்சு
இயற்பெயர்: அன்ரனி சிறிகாந்த்
ஊர்: பியர், இந்தியா.
வீரப்பிறப்பு: 04.09.1975
வீரச்சாவு: 20.12.1992
நிகழ்வு: மன்னார் நானாட்டன் மாதிரிக்கிராமம்
படை முகாம்களுக்கிடையில் அமைந்துள்ள காவலரண்கள்
மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குணதேவன்(லக்ஸ்மணன்)
இயற்பெயர்: அம்மனாரி தென்னரசு
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 01.01.1966
வீரச்சாவு: 13.05.1996
நிகழ்வு: அம்பாறை 11ம்கொலனியில் அமைந்திருந்த
காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு

நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: பெரியதம்பி(விஸ்ணு)
இயற்பெயர்: சிவானந்தம் முகேஸ்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 31.05.1975
வீரச்சாவு: 19.05.1996
நிகழ்வு: திருகோணமலை கீலக்கடவெல படைமுகாம் மீதான
தாக்குதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்: மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குற்றாளன்
இயற்பெயர்: கந்தையா கலைச்செல்வன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 08.08.1969
வீரச்சாவு: 16.07.1996
நிகழ்வு: மன்னார் பள்ளிமுனைப்பகுதியில்
படையினரின் சுற்றிவளைப்பின் போது சயனைட்
உட்கொண்டு வீரச்சாவு

நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுதா
இயற்பெயர்: வீரப்பன் இலட்சுமணன்
ஊர்: தஞ்சாவூர், தமிழ்நாடு
வீரப்பிறப்பு: 28.10.1980
வீரச்சாவு: 05.07.1999
நிகழ்வு: மன்னார் பள்ளமடு பகுதியில்
சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலில்
வீரச்சாவு
துயிலுமில்லம்: கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: குருசங்கர்
இயற்பெயர்: பழனியாண்டி மகேந்திரன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 18.04.1973
வீரச்சாவு: 25.07.1996
நிகழ்வு: முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள்
நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம்
பெறும்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது..

நடிகனுக்குப் பாலூற்றும் இளைஞரைப் பற்றிப் பேசிக் களைப் படைந்தோர் இனி இவர்களைப்பற்றிப் பேசுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.