31/07/2017

பாஜக தலைவர் அமித்ஷாவின் சொத்து 5 ஆண்டில் 300% சதவிகிதம் உயர்வு. 8.54 கோடி ரூபாயாக இருந்தது 34.31 கோடியாக மாறியுள்ளது, வெளியிட்டவுடன் செய்தியை நீக்கிய தேசிய ஊடகங்கள்...


பாஜக தலைவர் அமித்ஷா மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு போட்டியிட்டுள்ளார். இதற்காக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் அவரின் மொத்த சொத்து மதிப்பு (மனைவியுடையதும் சேர்த்து)  ரூ 34.31 கோடியாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு அவரின் சொத்து மதிப்பு  ரூ 8.54 கோடியாக இருந்ததாக "Business Insider" குறிப்பிட்டுள்ளது, கிட்டதட்ட 5 ஆண்டுகளில் 300% சதவிகிதம் அமித்ஷாவின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கில் காட்டியதே இத்தனை மடங்கு என்றால் கணக்கில் வராதது எத்தனை மடங்காக இருக்கும் என எதிர்கட்சிகள் விமர்சனங்களை எழுப்பி வருகின்றது.

சேவை செய்ய வருகின்றோம் எனக் கூறும் அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பு இத்தனை மடங்கு உயர்கிறது என்றால் இவர்கள் யாருக்கு சேவை செய்கின்றார்கள் தங்களுக்காகவா அல்லது நாட்டு மக்களுக்காகவா அரசியல்வாதிகளிடையே ”கொடி மற்றும் கட்சி” பாகுபாடு மட்டும் தான் இருக்கின்றதே தவிற வேறு எந்த வித்தியாசமும் இல்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த செய்தியை வெளியிட்ட தேசிய ஊடகங்கள பாஜக விற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்ததும் சில மணி நேரங்களில் அந்த செய்தியை உடனடியாக நீக்கியுள்ளது குறிப்பிடதக்கது.

இது தான் ஊடக தர்மமா என கடும் விமர்சனங்களை நடுநிலையாளர்கள் எழுப்பி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.