31/07/2017

மூன்றாவது நாளைக் கடந்து தொடர்கிறது உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கக் கோரி காலவரையரையற்ற பட்டினிப் போராட்டம்...


இந்திய அரசே.. தமிழ்நாடு சட்டமன்றத்தின் 2006-ம் ஆண்டு தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற்றுக் கொடு என்று போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் தமிழ்-போராட்டக் குழுவின் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மே பதினேழு இயக்கமும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளது.

தமிழில் வழக்காடுவதென்பது நமது பிறப்புரிமை. இந்த 8 தோழர்களும் நமது உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மதுரை காளவாசலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த போராட்டத்தில் பெருமளவில் திரண்டு ஆதரவினை அளிக்க வேண்டியது அனைவரின் கடமை.

உரிமைகளை மீட்க அனைவரும் திரண்டு தோழர்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் கேட்டுக் கொள்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.