23/07/2017

இந்த நாட்டில் எப்போது இந்து, இந்துமதம் என்ற சொல் உள்ளே வந்தது தெரியுமா நண்பர்களே...


1921 April 14ம் தேதிக்கு முன்பு இந்தியா வரலாற்றில் இந்து என்ற வார்த்தையே கிடையாது.. ஏனென்றால் அப்போது british அரசாங்கம்..

அப்போது தான் இந்தியாவில் மொத்தமாக எத்தனை கிருஸ்துவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பிய பிரிட்டிஷ் அரசாங்கம்.. மதரீதியான கணக்கெடுப்பை நடத்தியது..

கிருஸ்துவர்கள் முஸ்லிம்களை தனித்தனியாக எளிதாக பிரித்த ஆங்கிலேய அரசாங்கத்தால் அதன் பிறகு ஒரு பெரிய மக்கள் தொகையை பிரிக்க முடியாமல் திணறியது ஏனென்றால் அவர்களுக்கு மதம் என்ற ஒன்றே கிடையாது..

அப்போது தான் பிராமணன்கள் தாங்கள் இந்துக்கள் என்று சொன்னதை ஏற்றுக் கொண்டது.. மற்றவர்கள் எல்லாம் யார் என்று கேட்டபோது அவர்களைப் பற்றி எங்களுக்கு தெரியாது என்று சொன்னது இந்த பிராமண கும்பல்..

இந்துக்களாக இருக்க இந்த பிராமணன்கள் அனுமதித்தால் இந்துக்களாக இருக்கலாம்..

அதனால் தான் மற்ற எல்லா ஜாதிக்காரர்கள் ஜாதி சான்றிதழிலும் இந்து செட்டியார்.. இந்து வன்னியர் என்று தான் எழுதியிருக்கும். ஆனால் பிராமணன்கள் ஜாதி சான்றிதழில் வெறும் பிராமணன் என்று தான் எழுதியிருக்கும்..

ஏனென்றால் நம் நாட்டு சட்டப்படி பிராமணன் தான் இந்து.. மற்றவர்கள் எல்லாம் இந்து அல்ல..

நம்பிக்கை இல்லையென்றால் தகவல் அறியும் சட்டத்திலேயே தகவல் கேட்டு உறுதி படுத்தி கொள்ளலாம்..

இதைவிட ஒரு ஆச்சரியமான செய்தி என்னவென்றால்..

Who is a hindu என்று கேட்டால் நம் சட்டம் சொல்வது என்ன தெரியும.. யாரெல்லாம் முஸ்லிம்கள் இல்லையோ யாரெல்லாம் கிருஸ்துவர்கள் இல்லையோ யாரெல்லாம் சீக்கியர்கள், பார்சிக்கள் இல்லையோ அவர்கள் தான் hindu என்று சொல்கிறது..

இது எப்படி இருக்கிறதென்றால்.. மாடு என்றாலென்ன என்று கேட்டால் எதெல்லாம் நாய் இல்லையோ எதெல்லாம் பூனையில்லையோ எதெல்லாம் கழுதை இல்லையோ அதெல்லாம் மாடு என்று சொல்வது போல் உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.