23/07/2017

டெல்லி பொருளாதார மாநாட்டில் பாஜக அருண்ஜேட்லி குமுறல்: கருப்பு பணத்தை ஒழிக்க முடியவில்லை...


தேர்தலில் கருப்பு பணம் புழங்குவதை தடுப்பது பெரும் சவாலாக இருக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பேசிய அவர், அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ரொக்க பரிவர்த்தனை பெருமளவில் குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் பணமற்ற பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன என்ற அவர், கருப்பு பண புழக்கம் குறைந்துள்ளது என்றும் கூறினார்.

அதே சமயம் தேர்தல்களின் போது அரசியல் கட்சிகளிடம் புழங்கும் கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதில் அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கருப்பு பண புழக்கம் பற்றி குறைசொல்வதை விட்டு அதை தடுப்பதற்கான யோசனைகளை அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என்று அருண்ஜேட்லி கூறியுள்ளார்.

இது குறித்து அரசியல் கட்சிகளுக்கு தாம் ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளதாக கூறிய அவர் இதற்கு எந்த கட்சியிடம் இருந்தும் பதில் வரவில்லை என்று கூறினார்.

கருப்பு பணத்தை வைத்து தேர்தலை சந்திக்கும் இப்போதைய நிலைமையே நீடிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் விரும்புகிறதா என்று அவர் வினவினார்.

டெல்லி பொருளாதார மாநாட்டில் சிங்கப்பூர் துணை பிரதமர் தர்மர் சண்முகமும் கலந்து கொண்டார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.