09/07/2017

பாஜக தமிழக விடிவெள்ளி அக்காவின் அன்பு ஆசிர்வாதங்களுடன் செல்லத் தம்பியின் தகிடுதத்தங்கள்...


வானதியின் சகோதரர் சிவக்குமார் பற்றிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

சுதர்சன் மற்றும் ராமானுஜத்தால் துவங்கப்பட்ட நிறுவனம் அவர்களின் கையையே விட்டு போனதில் ஒரு துரோக வரலாறு இருக்கிறது என்ற உண்மை நம்மை திகைக்க வைக்கிறது.

வானதியின் தம்பியான சிவக்குமார் ஒரு சாதாரண கூலிக்கு ஜைலாக் நிறுவனத்தில் சேர்ந்த நபர். வானதி மற்றும் சீனிவாசன் ஆகியோருக்கு சுதர்சனுடன் இருந்து உறவால் அதிவேகமாக ஜைலாக் நிறுவனத்தின் பதவிகளில் உயர்ந்தார். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டது. நிறுவனத்தில் வேலைக்கு சேர்ப்பவர்கள் எல்லாரும் சிவக்குமார் சொல்லியதால் சேர்க்கப்பட்டவர்கள் என்ற நிலை வந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட சிவக்குமார் தங்கியது, சாப்பிட்டது முழுக்க, முழுக்க சுதர்சனின் அமெரிக்க பங்களா வீட்டில்தான். ஜைலாக்கின் ஐரோப்பிய சேவைகளின் தலைமை பொறுப்பு சிவக்குமாருக்கு வழங்கப்படுகிறது. அனைத்து அதிகாரங்களும் சிவக்குமார் கையில் என்ற நிலைமையும் உருவாகிறது.

இப்போதுதான் இந்த துரோக வரலாற்றின் உச்சம் துவங்குகிறது. ஜைலாக் நிறுவனத்திற்கு வர வேண்டிய 20 மில்லியன் யூரோவை ஒரு நிறுவனம் ஜைலாக்கிற்கு அனுப்புகிறது. சுதர்சனும், ராமானுஜமும் ஒருவரை ஒருவர் கவிழ்க்க அதிகார போட்டியில் இருந்த இருண்ட காலம் இது.

20 மில்லியன் என்பது சுமார் 140 கோடிகள். 2007ல் ஜைலாக் பொது பங்குகளை வழங்கிய போது வெளியில் விடப்பட்டது 36 லட்சம் பங்குகள் மட்டுமே. 10 ரூபாய் மதிப்பில் அவற்றால் 3.6 கோடிகளை மட்டுமே கொண்டு வந்து இருக்க முடியும். ஆனால் முக மதிப்பு 10ரூபாய், விற்கப்படும் விலை 350 ரூபாய் என இருந்ததால் அதன் மொத்த விற்பனை 126 கோடிகளை தொட்டது. நான் கூறும் இந்த 20 மில்லியன், அதாவது 140-145 கோடிகள் கம்பெனி வருமானம் வரும் காலத்தில் ஜைலாக்கின் 350 ரூபாய்க்கு வழங்கப்பட்டு இருந்த பங்குகளின் மதிப்பு 15 ரூபாய்க்கும் குறைவாக பங்கு சந்தையில் விற்றுக் கொண்டு இருந்து(இது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது). ஆக ஜைலாக்கின் பங்குகளின் மதிப்பை குறைத்து, மக்களிடம் இருந்து பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி விட திட்டமிட்டு சுதர்சன், தனது ஐரோப்பிய அலுவலகத்திற்கு வந்த பணத்தை தனது சொந்த வங்கிக் கணக்கிற்கு அனுப்புமாறு சிவக்குமாரிடம் பணிக்கிறார். ஏற்கெனவே மற்றொரு முக்கிய பங்குதாரரும், கம்பெனியின் மேனேஜிங் டைரக்டருமான ராமானுஜத்துடன் தனக்கு இருக்கும் பிரச்சனையை இதை வைத்து அனைத்து பங்குகளையும் வாங்கி விட்டு, ராமானுஜத்தை கம்பெனியை விட்டு சுதர்சன் திட்டமிடுகிறார். தனது வீட்டில் தங்கி, தான் போட்ட சோற்றை தின்று,தான் கொடுத்த ஐரோப்பிய தலைமை பதவியை வைத்துக் கொண்டு இருக்கும் சிவக்குமார் தனக்கு துரோகம் செய்ய வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையில் சுதர்சன் இவ்வாறு உத்தரவிட, அங்கு வேறு துரோகமும், சதித் திட்டமும் அரங்கேறி வந்தது.

வானதி தம்பி சிவக்குமார் திருட்டுத்தனமாக ராமானுஜத்துடன் கை கோர்த்தார். பணம் ராமானுஜத்தின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு சிவக்குமாரால் அனுப்பப்படுகிறது. விளைவு, சத்தமில்லாமல் ஜைலாக்கின் பங்குகள் ஒரு மாதத்திற்குள் ராமானுஜம் மற்றும் சிவக்குமாரின் ஆட்களால் வாங்கப்படுகின்றன. எல்லாம் தன் கையில் என சுகபோகங்களுடன் சுதர்சன் வாழ்ந்து வந்த வசந்த காலம் இது.

இரண்டு மாதங்கள் கழித்து தனது மெயிலுக்கு வந்த ஐரோப்பா வங்கியின் கணக்கில் பணம் ராமானுஜத்திற்கு சென்றதை கண்டு அதிர்ந்தார் சுதர்சன். அதே நேரத்தில் கம்பெனியின் பங்குதாரர்களின் கூட்டத்தில் வைத்து சுதர்சன் சேர்மன் பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார்.

பிறகு இந்த நிறுவனம் எப்படி கார்த்திக் சிதம்பரத்தின் பினாமிகளின் கைக்கு சென்றது என்ற கதைகள் விரைவில் காண்போமா!…

வானதிக்கு ஆதரவு அளிக்கும் ஆதரவாளர்கள் யார் என்பதையும் நீங்கள் கேட்பது எனக்கு நன்றாக புரிகிறது.
சம்மன் ஏதோ எனக்கு வருவதாக அம்மணி சூசகமாக சொல்கிறார்கள்.
பார்த்து விட்டு பின்னர் பேசுவோமா?.

படத்தில் இருப்பது வானதியின் தம்பி சிவக்குமார் கந்தசாமி.

அத்தான்...மீண்டும் என்னை காப்பாற்ற வாங்க அருமை Zylog ஷேர் அத்தான் என்கிறாரோ!!.

இது வரை நோட்டீஸ்க்கு பொட்டு வெடி.
இனி சம்மனுக்கு வாண வேடிக்கை.

வானதி குழுமம் வாழ்க.

வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை.
ஓம் முருகா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.