19/07/2017

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி குடியரசுத்தலைவருக்கு நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்கள் ரத்தத்தால் கடிதம்...


17.07.2017 சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் நீட் தேர்வால்  மருத்துவ வாய்ப்பை இழந்த மாணவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.  அப்பொழுது தங்களது அடிப்படை உரிமை பாதிக்கபடுவதாக  தெரிவித்தார்கள்.

இதில் சென்னையை சேர்ந்த   அனுசியா அரியலூரை சேர்ந்த அனிதா மதுரையை சேர்ந்த பார்வை தாசன் உள்ளீட்ட பல மாணவர்கள் கூட்டாக இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.  அவர்கள் தங்களது  பனிரெண்டாம் வகுப்பு மதிபெண்ணையும் அவர்கள் நீட்டில் வாங்கிய  மதிப்பெண்ணையும் பட்டியலாக  வெளியிட்டுள்ளனர். சென்னையை சேர்ந்த அனுசியா  பேசும் போது தன் நண்பர்கள் இருபதுக்கும்  மேற்பட்டோர்   மெடிக்கல் கட்டாப் 196  மேல் எடுத்தும் நீட் தேர்வால்  வாய்ப்பை இழந்துள்ளாக தெரிவித்தாகள்  அவர்களது  மதிப்பெண் மற்றும் நீட் மதிபெண்ணையும் அவர்கள்  வெளியிட்டுள்ளனர்.

அரியலூரை சேர்ந்த அனிதா பேசும் போது  தன் கிராமத்தில் அரசு பள்ளியில் படித்து 1176 மதிப்பெண் எடுத்த  தான் தான் முதல் மருத்துவராக வரும் வாய்ப்பு இருந்தது ஆனால் நீட்  தேர்வினால் எங்கள் கிராமத்தில் இருந்து இனி மருத்துவர்களே  வர முடியாத சூழல் உள்ளாகிவிட்டது என்றும் தெரிவித்தார்.

மாணவர்களின் பெற்றோர் பேசும் போது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 14 அனைவருக்கும் சமமான வய்ப்பு என்று சொல்கிறது அது எங்களுக்கு மறுக்கபட்டிருகிறது என்றும். தமிழகத்தில் இருந்து சென்ற  பாராளுமன்ற உறுப்பினர்கள் மோடி அரசை அரசியல் அமைப்பு சட்டத்தின் படி  அரசை நடத்த கோர வேண்டும் இதற்கு தீர்வு   என்பது   சிறப்[பு சட்டம் இயற்றி அதனை  குடியரசு தலைவர் ஒப்புதல் வாங்கி அதனை நிறைவேற்ற வேண்டும் அப்படி  செய்யாமல் வேறு  என்ன செய்தாலும்  அது கண் துடைப்பு என்று தெரிவித்தார்கள்.

அதே போல  ஒரே பாடத்திட்டம் இல்லாத நாட்டில் ஒரே பாடத்திட்டதில் தேர்வு என்பது அநீதி  என்று ரத்தத்தில் எழுதி கொண்டு வந்திருந்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.