25/08/2017

மெய்யியல் உணர்வோம் - தேங்காய்...


தமிழர் வாழ்வியலில் தேங்காய் உடைக்கும் வழக்கம் முதன்மையான ஒன்றாக விளங்குகிறது.

அடிப்படையில் நன்னெறியை உணர்த்துவதற்கான உயரிய விளக்க குறியீடாகவே தேங்காய் பயன் படுத்தப்பட்டுள்ளது.

காலப்போக்கில் மெய்யியல்கள் புறந்தள்ளப்பட்டு தமிழர் வாழ்வில் சடங்கு முறையாக மாற்றம் கண்டுவிட்டது.

மனிதர்களின் அறியாமை நீங்கி தூய அறிவு வெளிப்பட வேண்டும் என்பதைனை உணர்த்தும் வகையில் தேங்காய் ஓடு நம்மை சூழ்ந்துள்ள அறியாமையாகவும் உள்ளிருக்கும் வெள்ளை நிற பருப்பு தெளிந்த அறிவாகவும் குறிக்கப்படுகிறது.

அறியாமையின் தன்மைகளான ஆணவம், கன்மம், மாயை குடுமியால் மறைக்கப்பட்டிருக்கும் மூன்று கண்களை போன்ற திட்டுகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

நம்மை சூழ்ந்துக் கிடக்கும் அறியாமைகளை களைந்து தூய அறிவோடு வாழ வேண்டும் எனும் தத்துவத்தை உணர்த்தவே தேங்காயை உடைத்து குடுமியை நீக்கும் வழக்கத்தை உருவாக்கினர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.