31/08/2017

தலை வலியை குறைக்கும் தேங்காய் எண்ணெய்...


மூளையை சுற்றி பின்னி பிணைந்திருக்கும் நரம்புகளில் ஏற்படும் அழுத்தமே தலைவலி ஏற்பட முக்கிய காரணம். தலை, கழுத்தை சுற்றி உள்ள நரம்புகள், தசைகளில் வலி ஆகியவற்றின் தொகுப்புதான் தலைவலி. மனப்பதற்றம் அதிகரிப்பதால் உடலின் வெப்பம் அதிகரிக்கும். அதுவே தலைக்குள் பரவி வலியை உண்டாக்குகிறது. வலி நிவாரண மாத்திரைகளைக் காட்டிலும் பதற்றமான மனநிலையைத் தவிர்ப்பதே தலைவலிக்கான தீர்வாகும். தலைவலி ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

காரணங்கள் :

1. மன அழுத்தம்.

2. ஒற்றைத் தலைவலி, விழி களைப்பு, உடல் வறட்சி, குருதியில் சர்க்கரை குறைதல்.

3. நெற்றி எலும்பு புழை அழற்சி (sinusitis) என்பவற்றை குறிப்பிடலாம்.

4. உயிர் ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிலைமைகளான மூளையுறை அழற்சி (meningitis), மூளையழற்சி (encephalitis), மிக உயர் ரத்த அழுத்தம், மூளைக்கட்டிகள் போன்றவற்றினால் வரும் தலைவலிகள் மிகக் குறைவே ஆகும்.

5. பெண்களிடையே காணப்படும் மிகப் பெரும்பாலான தலைவலிகளுக்கு, மாதவிலக்கு  ஆண்டுகளில் எப்பொழுதும் இருக்கும் பெண்மை இயக்குநீர் (estrogen) அளவின்  ஏற்ற, இறக்கமே காரணமாகும்.

6. தலை / கழுத்தில் காயம் ஏற்படுதல் (Trauma).

7. தலை / கழுத்து ரத்தக் குழாய்களில் ஏற்படும் பாதிப்பு.

8. ரத்தக்குழாய்கள் தவிர, தலைக்குள் ஏற்படும் மற்றப் பாதிப்புகள் (அ) நோய்கள்.

9. போதைப் பொருட்களை உட்கொள்ளுதல் (அ) திடீரென்று நிறுத்திவிடுதல்.

10. நோய்த் தொற்று.

11. ரத்த ஓட்டப் பாதிப்பு.

12. கபாலம், கழுத்து, கண்கள், காது, மூக்கு, சைனஸ், பல், வாய் போன்றவற்றால் ஏற்படும் தலை, முக வலிகள்

13. மனநோயால் ஏற்படும் தலைவலிகள்.

14. ரத்தக் கொதிப்பு.

உணவுப் பழக்கம் :

அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்கள் தினமும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். அதீத பசியும் தலைவலியைத் தூண்டும். சூடு கிளப்பும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். உடலின்  நீர்ச்சத்து குறையாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

சிகிச்சை :

• கல் உப்பு சிறிது கிராம்பை எடுத்து சிறிது பால் சேர்த்து அரைத்து உட்கொண்டால் தலைவலியின் கடுமை குறையும்.

•  ஒரு டம்ளர் வெந்நீருடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கலந்து குடிக்கலாம்.

• யூகலிப்டஸ் தைலம் கொண்டு மசாஜ் செய்தல் ஆகும்.

•  சூடான பசும்பால் குடிக்க தலைவலி குறையும். மேலும் தலைவலியின் போது, உணவில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளுதல் நல்லது.

• மசாலா பொருட்களுள் ஒன்றான பட்டையை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பசை போலாக்கி, அதனை நெற்றியில் பற்றுப்போல தடவலாம்.

• சந்தனக்கட்டையை சிறிது தண்ணீர் விட்டு பசை போல் அரைத்து அதனை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி பறந்துவிடும்.

• நெற்றியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்தால், தலைவலி நீங்கும். தேங்காய் எண்ணெய் குளிர்ச்சியைத் தரும் குணம் கொண்டது. ஆகவே, கோடைக்காலத்தில் தலைவலியால் அவஸ்தைப்பட்டால், இம்மருத்துவம் நல்ல பலனைத் தரும்.

• சிறிது பூண்டு பற்களை எடுத்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, அதிலிருந்து ஜுஸ் எடுத்து ஒரு டீஸ்பூன் அளவு குடித்தாலும் நிவாரணம் கிடைக்கும். பூண்டுச்சாறு தலைப்பகுதிக்குள் ஊடுருவிச் சென்று, வலி நிவாரணி போல செயல்பட்டு, தலைவலியை நன்றாக குறைக்கும்.

• ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வெந்நீர் நிரம்பிய வாளியில் கால்களை நனைக்கும் அளவுக்கு வைத்திருந்தால் தலைவலி குறையும். இதனை இரவு படுக்கப்போகும் முன் பதினைந்து நிமிடங்கள் செய்ய வேண்டும்.

•  காலையில் படுக்கையைவிட்டு எழுந்ததும், ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது வெதுவெதுப்பான தண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும். இப்படி 10 நாட்களுக்கு செய்து வந்தால், நாள்பட்ட தலைவலி குறையும்.

• தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும் பொருட்களில் பாதாம் எண்ணெயும் ஒன்று. எனவே நெற்றியில் சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி, 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும்.

• வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை நன்றாக அரைத்து நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொள்ளவும்.

நன்றாக தூங்குதல் :

தலைவலியால் அவஸ்தைப்படுவதற்கு முக்கியமான காரணம் சரியான தூக்கம் இல்லாததுதான். எனவே தலைவலியிலிருந்து முழுமையாக விடுபட வேண்டுமானால், தூக்கத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு 6 மணி நேரமாவது ஆழ்ந்த தூக்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தலைவலி குறையும்.

வலி நிவாரண மாத்திரைகள் :

வலி நிவாரண மாத்திரைகளை சில நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மாதம் ஒன்றில் 15 நாட்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. தலைவலியை  தவிர்ப்பதற்காக எந்நேரமும் வலி நிவாரண மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. தலைவலி ஏற்படும் போது மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

உணவு முறைகள் :

சில சமயத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் கூட தலைவலியை உருவாக்கிவிடும். காபியில் இருக்கிற காபின், வெண்ணையில் இருக்கிற டைரமைன், வாழைப்பழம் போன்ற சில பழங்கள், சிட்ரஸ் இருக்கிற ஆரஞ்சு, லெமன் போன்ற சில வகை உணவுப் பொருட்களுக்கு தலைவலியைத் தூண்டுகிற சக்தி இருக்கிறது.

சாப்பிட முடியாமல் போவது, சாப்பிடும் நேரங்களில் மாற்றம் போன்ற சில பழக்கங்களும் தலைவலியைத் தூண்டும். உணவில் காய்கறி, பழங்கள், கீரையை அதிகம் சேர்க்க வேண்டும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சீஸ், சாக்லெட், ஆட்டுக்கறி போன்றவற்றை முழுவதுமாக தவிர்த்து விட வேண்டும். இதற்குப் பதிலாக, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் பி12, புரதம், கால்சியம் ஆகியவை நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சேர்த் துக்கொள்ள வேண்டும். அதிலும் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வெந்தயக்கீரை போன்ற இலை வகைக் காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். தலைவலியில் இருந்து விடு படவேண்டுமென்று விரும்பினால், ஃபாஸ்ட் புட் மற்றும் மசாலா உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

எம்.எஸ்.ஜி. இருக்கிற  அஜினோமோட்டோ கூட ஒரு தலைவலி தூண்டல் இருக்கிற உணவுப் பொருள்தான். சரியான உணவு, நல்ல தூக்கம், மிதமான உடற்பயிற்சிகள், சில மனம், உடல் தளர்வடையச் செய்யும் பயிற்சிகள் போன்றவற்றை முறையாக செயல்படுத்தினால் தலைவலி ஏற்படுவதை இயற்கையாகவே தவிர்க்கலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.