22/09/2017

இது தான் தமிழகத்தின் அரசியல் சிக்கல்...


உலக தமிழர்களின் கவனத்துக்கு...

இந்த பதிவு தமிழகத்தில் இது நாள் வரை உள்ள அரசியல் குழப்பம் பற்றி போதிய புரிதலை உங்களுக்கு தரும் என்று நம்புகிறோம். இந்த பதிவு அதற்க்கான ஆரம்பமாய் இருக்கும் என்று நினைக்கிறோம்.

6 கோடிக்கும் அதிகமான தமிழர்கள் இருந்தும், ஈழமே என் மூச்சு என்று தொடை தட்டிய திராவிட இயக்கங்கள், தலைவர்கள் உட்பட பலர் இருந்தும், அவர்கள் கையில் அதிகாரம் இருந்தும் எப்படி ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களை தமிழக தமிழர்களான நாங்கள் இறக்க விட்டோம் என்று இது நாள் வரை நீங்கள் குழம்பி இருந்து இருப்பீர்கள்.

இது போன்ற கேள்விகளுக்கும் இந்த பதிவில் விடை கிடைக்கும் என்று நம்புகிறோம்.

நாயக்கர் மற்றும் நாயுடு நண்பர்களிடம் உரையாடிய போதும், தமிழ் நண்பர்கள் வழங்கிய முக்கிய புள்ளிவிவரங்கள் அடிப்படையிலும் தமிழகத்தில் ஊடகம், அரசியல், கல்வி, தொழில் துறை என அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருவது தெலுங்கர்கள் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு விட்டனர்.

தாங்களே தமிழகத்தில் பெரும்பான்மையானவர்கள், தாங்கள் இல்லை எனில் தமிழகத்தில் ஒரு புல் பூண்டு கூட அசைய முடியாது என்று பெருமை பொங்க தெரிவித்தனர். மகிழ்ச்சி.

அந்த தெலுங்கு நண்பர்களிடம் சில கேள்விகளை முன்வைக்கிறோம். அதற்க்கு முன்பு சில விசயங்களை தெளிவாக கூறிவிடுகிறோம்.

என்ன தான் வரலாற்று ரீதியாக தமிழர்களை, தெலுங்கர்கள் வீழ்த்தி இருந்தாலும், அவற்றை மறந்து இங்கிருக்கும் நாயக்கர் உள்ளிட்ட தெலுங்கு மக்களை வேற்றுமை பாராட்ட தமிழர்கள் விரும்பவில்லை.

நீங்கள் மற்ற மாநிலங்களில் தமிழர்களை கேவலமாக நடத்துவது போல, நாங்கள் உங்களை இங்கே அப்படி நடத்த ஒருகாலும் எண்ணியது இல்லை, எண்ணப் போவதும் இல்லை. நாங்கள் எதிர்ப்பது உங்களை அல்ல. எங்கள் மீதான உங்களின் ஆதிக்கத்தையே....

கண்ணோட்டம் 1...

தமிழகத்தில் நாயக்கர்களே பெரும்பான்மை மக்கள் (சுமார் 3 கோடி) என்று நீங்கள் சொல்வது உண்மை எனில், கீழ்க்கண்ட, உலக தமிழர்களின் கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்க கடமை பட்டு உள்ளீர்கள்.

1) தமிழனை வீழ்த்தியது ஆரியன் அல்ல, தெலுங்கர்களான திராவிடன் தான் என்ற உண்மையை ஈ.வே.ராமசாமி நாயக்கர், கொளத்தூர் மணி, கோவை இராமகிருஷ்ணன், மு.கருணாநிதி, வைகோ, விஜயகாந்த் உட்பட தெலுங்கர்கள் அனைவரும் மறைத்தது ஏன்? என்ன காரணம்?

2) சிங்களன் ஈழத்தமிழனை அகதியாக உலவவிட்டது போல, நாயக்கர்கள் மறவர், பள்ளர் உள்ளிட்ட தமிழ் சாதிகளை பர்மா போன்ற நாடுகளுக்கு அகதியாய் விரட்டி விட்டது ஏன்? மூவேந்தர் காலத்தில் வராத பஞ்சம், உங்கள் காலத்தில் எப்படி வந்தது? வந்ததா , வரவழைக்கப்பட்டதா? நிலம், உடமைகள் பிடுங்கப்பட்டும், அவை பாழ் படுத்தப்பட்டும் ஆன பிறகு, பிழைக்க சென்ற தமிழர்கள் பர்மாவை செழிப்பாக்கியது சாத்தியம் என்றால், இங்கு அவர்களை பஞ்சத்தில் தள்ளியது யார்? இந்த வரலாற்று பதிவை எந்த திராவிட சிகாமணியும் பதிவு செய்யவில்லையே. ஏன்?


3) உங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆட்சி அதிகாரம் அனைத்தும் தெலுங்கர்களான உங்களிடம் தான் இன்றும் உள்ளது என்று நீங்கள் நியாயம் கற்பித்தால், மணல் கொள்ளை, அறிவியல் பூர்வமான ஊழல், இயற்க்கை வளங்களை சுரண்டுதல், விவசாய நிலங்களை நாசமாக்கியது, சுருக்கமாக தமிழ் நாட்டில் ஜனநாயக போவையில் கொள்ளை மட்டுமே அடிப்பது தெலுங்கர்களான நீங்கள் தான் என்ற உண்மையை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள தயாரா...? அப்படி ஒப்புக் கொண்டால், உண்மையில் இங்கே தமிழகத்தில் என்ன அரசியல் சிக்கல் உள்ளது என்பது ப்லைச்சென்று அனைவருக்கும் தெரியும் அல்லவா?

4) நீங்கள் பெரும்பான்மையான மக்கள் என்றால், 'தெலுங்கர் முன்னேற்ற கழகம்' என்று வெளிப்படையாக நீங்கள் அரசியல் செய்யலாமே? யாரை ஏமாற்ற 'திராவிடர்' என்ற வார்த்தையும், தி.க, தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க போன்ற கட்சிகள் இங்கே இருக்கின்றன?

5) சாதியை வைத்து பிழைப்பு நடத்த வேண்டிய அவசியம் இங்கே இருக்கும் எந்த தமிழ் சாதிக்கும் இல்லாத பட்சத்தில், இங்கே நடக்கும் அனைத்து சாதி மோதல்களுக்கும் அடிப்படை காரண கர்த்தாக்கள் தெலுங்கர்களான உங்களின் பிரித்தாளும் தந்திரம் தான் என்பதை ஒப்புக் கொள்ள தயாரா...?

நீங்கள் தான் 3 கோடி பேர் இருக்கிறீர்களே....? நேரடியாகவே ஆதிக்கம் செய்ய முடியுமே....? எதற்கு எங்களுக்குள் சாதி சண்டையை மூட்டிவிட்டு அய்யம்பேட்டை வேலை செய்கிறீர்கள்...? எதற்கு அவற்றுக்கு 'கலப்பு திருமணம், சாதி ஒழிப்பு' என்று முற்போக்கு முகமூடி வேறு போட்டு கொள்கிறீர்கள்....? இது எதிரியை களத்தில் நேருக்கு நேர் சந்தித்த நாயக்க மன்னர்களின் புகழுக்கு களங்கம் கற்பிப்பது போல இல்லையா....?

6) 'இது தான் நிலைமை, இதை எல்லாம் மாற்ற முடியாது. தமிழர்கள் நீங்கள் அப்படியே இங்கு இருந்துவிட்டு போங்கள்' என்பது தான் கோபால்சாமி நாயுடு (என்கிற) வைகோ உள்ளிட்டோரின் கூற்று என்றால், அதை பகிரங்கமாக பொது ஊடகத்தில் சொல்ல தயாரா...? இந்த கூற்று சரி என்றால், சிங்களனும், ஈழத்தமிழனும் இலங்கையில் ஒன்றிணைந்து வாழ முடியுமே....? அதை ஏன் திராவிட சிகாமணிகள் எதிர்க்கிறீர்கள் (அல்லது நடிக்கிறீர்கள்?). கடலுக்கு இந்த பக்கம் ஒரு நியாயம், அந்த பக்கம் ஒரு நியாயம் என இரட்டை நியாயம் கடை பிடிப்பது ஆதிக்கம் செலுத்தும் தெலுங்கர்களுக்கு அழகா? பதில்களை எதிர் பார்க்கிறோம்.

கண்ணோட்டம் 2...

1. நீங்கள் சொல்வது போல தமிழகத்தில் நீங்கள் பெரும்பான்மை இல்லை எனில், திரும்பிய பக்கம் எல்லாம் உங்களின் ஆதிக்கம் உங்களின் எண்ணிக்கைக்கும், விகிதாசாரத்துக்கும் விட மிக அதிகமாக இருப்பது தவறு இல்லையா? இதற்க்கு நீங்கள் என்ன நியாயம் வைத்து இருக்கிறீர்கள்?

2. வெறும் 10000 பேர் கூட இல்லாத தெலுங்கு சின்ன மேளம் சாதியை சேர்ந்த மு.கருணாநிதி அவர்கள், பல கோடி தமிழருக்கு தலைவராக ஆதிக்கம் செய்வது நியாயமா?

3. நீங்கள் தமிழர்களுக்கு நன்மை செய்யும் நோக்கில் ஆதிக்கத்தை வைத்து இருப்பதே நியாயமற்ற செயல் என்று கூறுகிறோம். ஆனால், வரலாறை ஒழித்து, வாழ்வாதாரத்தை நசுக்கி, தமிழர்களை ஓட்டாண்டி ஆக்குவதற்கு தான் அந்த அதிகாரத்தை இன்று வரை பயன்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள் என்பது தெரிந்தும், எங்கள் மீதான உங்கள் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?

சொல்லுங்க பாஸ்....சொல்லுங்க.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.