23/10/2017

மணல் கொள்ளையர்கள் அட்டூழியத்தால், ஒரு கிராமமே தண்ணீரில் மூழ்கும் அபாயம்...


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாலாற்றங் கறையில் அமைந்துள்ளது பட்டு கிராமம், இங்கு சுமார் 300, குடும்பங்களை சேர்ந்த 2000, பொது மக்கள்  வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தினரின் முக்கிய வாழ்வாதாரம் விவசாயம் மற்றும் விவசாய கூலி ஆகும், இந்த கிராமத்தில் பாலாற்று மணல் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிக அளவில் உள்ளதாகவும் இதன் காரணமாக சில நாட்களுக்கு முன் ஏற்ப்பட்ட ஆற்று வெள்ளம் ஊருக்குள் வந்துவிட்டது எனவும், இப்பகுதியில் அதிக அளவில் மணல் கொள்ளையடிப்பதால் மீண்டும் வெள்ளம் ஏற்ப்பட்டால் கிராமமே ஆற்று வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

தொடர் மணல் கொள்ளையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள்  பாலாற்றில் இருந்து சென்னை மற்றும் கர்நாடக மாநிலத்திற்க்கு கடத்த சுமார் 12, க்கும் மேற்பட்ட இடங்களில் 250, க்கும் மேற்பட்ட மணல் குவியல்களை கண்டு அதிர்ச்சியடைந்து பேர்ணாம்பட் தாசில்தார் அவர்களுக்கு தகவல் கொடுத்தனர் அதன் அடிப்படையில் அங்கு வந்த தாசில்தார் மற்றும் வருவாய் துறையினர் குழுவினர் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள மணல் குவியல்களை பரிமுதல் செய்தனர். மேலும் பரிமுதல் செய்யப்பட்ட மணல் குவியல்கள் அனைத்தும் அரசு கட்டிட கட்டுமாண பணிகளுக்  மட்டுமே பயன்படுத்தப்படும் என வேலூர் மாவட்ட கோட்டாட்சியர் கூறினார்.

செய்தியாளர்: ஞானவேல், குடியாத்தம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.