28/10/2017

சிங்கப்பூரின் பிரம்படி எப்படிபட்டது?


நம்மூர்ல இருக்கும் புனிதர்களுக்கு சிங்கப்பூர் அடின்னா எப்படீன்னு தெரியாது என்பதால் தெளிவாக விளக்குகிறேன்.

நாலு பிரம்படிக்கு பதிலா அபராதம் 5 லட்சம் சிங்கப்பூர் டாலர் கட்டுறயா என்றால் சரி என கட்டுவார்கள் என்பதே அடி எப்படி இருக்கும் என சொல்லும்.

மூங்கில் போன்ற ஒரு மரத்தின் குச்சி 1.5 இன்ச் தடிமனாகவும் 4 அடி நீளமாகவும் இருக்க வேண்டும். அடிப்பதற்கு ஒரு நாள் முன்பு ஊற வைப்பார்கள் குச்சி உடையாமல் இருக்க. புண் ஆனால் சீழ் பிடிக்காமல் இருக்க ஆன்டிசெப்டிக் மருந்து தடவப்படும்.

முழு நிர்வாணமாக கீழே படத்திலே இருப்பது போல கட்டி வைத்து மேலே சிறுநீரகத்தை பாதுகாக்கும் தடுப்பு வைத்து அடிப்பார்கள். 

முதல் அடியிலேயே பெரும்பாலானோர் மயக்கம் அடைந்துவிடுவார்கள். பின்பு மயக்கம் தெளியவைத்து தெளிய வைத்து அடிப்பார்கள். மொத்தமாக 24 அடி அடிக்கலாம் என சட்டம் அனுமதி வழங்கியுள்ளது.

4 அடி என்றால் ஒரே காவல் அதிகாரியே அடிப்பார் அதற்கும் மேல் என்றால் இரண்டு மூன்று மாறிக் கொள்வார்கள். உச்சகட்ட விசையோடு ஓங்கி அடிக்கவேண்டும் என்பதே விதி. மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்திலே தடி இறங்கும்.

மயக்கம் தெளிய வைக்க அல்லது மருத்துவரீதியா வலுவாக இருக்கிறாரா என பரிசோதிக்க மருத்துவர் உடன் இருப்பார்.

4 அடிகளுக்கு மேல் வாங்கினாலே பின்பக்க தசை கிழிந்துவிடும். 5 அடிகளுக்கு மேல் என்றால் ஒருவருடம் நடக்கவே முடியாது. புண் ஆறினாலும் தழும்புகள் மறையாது.

தசை எப்படி கிழியும் என்ற போட்டோகள் இணையத்திலே இருக்கின்றன. தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டிலே செய்வது போல் கருப்புபணம் பதுக்கினால் 24 அடி விழும்.

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது சிங்கபூரிலே இல்லை ஏன்னா இந்த அடி தான். ரவுடித் தனம், திருட்டு, கொள்ளையை ஒழிச்சதும் இந்த அடிதான்.

24 அடி வாங்கினவன் வாழ் நாளிலே திரும்ப ஒழுங்கா நடக்க கூட முடியாது. அப்புறம் எங்க பொம்பளை கையபிடிச்சு இழுக்கறது? கொள்ளையடிக்கறது?

தமிழ்நாட்டு புனிதர்களுக்காகவே இதை கொண்டு வரனும். ஒரு வருசம் நடைமுறையிலே இருந்தா போதும். தமிழ்நாடு சிங்கப்பூராகி விடும்..

மன தைரியமுள்ளவர்கள் வீடியோ பார்க்க...

https://m.liveleak.com/view?i=3c9_1304013159

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.