26/10/2017

மனோசக்தி...


கண்ணுக்குத் தெரியாத மனோசக்தி ஒன்று நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கிறது என்பதை அறியாமல் அதைத் தூங்க வைத்திருக்கிறோம். நாம்தான் அதைத் தட்டி எழுப்ப வேண்டும்.

நல்லதையே நினைத்தால் நல்லதே நடக்கும், அதைவிட்டு நாம் எப்போதும் பொல்லாததையே நினைத்தால் அதுவே நடக்கும்.

நாம் பிறந்ததிலிருந்தே மனோசக்தி நம்மிடம் இருக்கிறது. யாரிடமிருந்தும் நாம் மனோசக்தியை வங்க வேண்டியதில்லை. பயிற்சியின் மூலம் நாம் அதை அதிகப்படுத்தமுடியும். முனிவர்கள் மட்டும்தான் மனோசக்திப் பெற்றவர்களா? இல்லை தனிமனிதன் ஒவ்வொருவரும் மனோசக்தியைப் பயன்படுத்த முடியும்.

இரண்டு மனம் வேண்டுமென்று நாம் கேட்க வேண்டியதே இல்லை. இரண்டு மனங்களுடன்தான் நாம் பிறந்திருக்கிறோம். நாம் பயிற்சித்தப்படி நடக்கும் வெளிமனம், நாம் பயிற்சிக்காத உள்மனம். அதைப் பயிற்சித்து உபயோகிக்க ஆரம்பித்தால் உலகம் நம் கையில்.

படைப்பின்படி எல்லா மனித உள்மனங்களும் பிறப்பிலிருந்து இணைக்கப் பட்டிருக்கின்றன. அதைத் தூண்டுவதோ துண்டிப்பதோ நம் கையில் இருக்கிறது. பயிற்சியினால் தவிர நம் வெளிமனத்தால் அதை உணர முடியாது.

நாம் உறங்கும்போது நம் வெளிமனமும் உறங்குகிறது, ஆனால் நம் உள்மனம் மட்டும் மற்ற உள்மனங்களுடன் தொடர்புக் கொண்டுதான் உள்ளது.நம் உள்மனம் நாம் பயிற்சிக் கொடுத்தப்படி நல்லதும் செய்யும், கெடுதலும் செய்யும்.

இயற்கையாகவே மனோசக்தியைப் பயன்படுத்துவோரும் நல்லத் தரமானப் பயிற்சினால் மனோசக்தியைப் பயன்படுத்துவோரும் நல்லதையே நினைத்து ஏன் நல்லதையே செய்யக்கூடாது?

கேடுதல்கள் செய்பவர்கள் தற்சமயம் நலமாக வாழ்வது போல் தோன்றினாலும் இறுதியில் படுகுழியில் தள்ளப்படுவதை நாம் பார்க்கப் போகிறோம்.bவாழ்க மனோசக்தி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.