13/11/2017

கடலூரில் கடல் சீற்றம்; 49 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை...

         
கடலூரில் ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் 49 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட பகுதிகள் பாதிப்படைந்தன.

கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்குள்ளானது. பள்ளி செல்லும் மாணவ மாணவியர், பணிக்கு செல்வோர் அதிக பாதிப்படைந்தனர். இதேபோன்று கடல் சீற்றத்தினால் நாகை மற்றும் கடலூர் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இந்த நிலையில், கடலூரில் இன்று கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் 49 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. புதுச்சேரியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கடல் சீற்றத்தினால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் 100க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.