09/12/2017

தீர்க்க தரிசனம் : இறந்தவர்கள் எழுப்பப்படுவார்களா - 2...


இது மருதம் நெய்தலுக்குறிய மகத்தான மரம் இந்த கல்பவிருட்ச மரம் இது காடுகளிலும் மலைகளிலும் தேடாதீர் என்பதிற்கு ஏற்ப சங்க கால இலக்கியங்களிலும் ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் ஆன்மீக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பண்டைய தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, புன்னை மரத்தை போற்றியதற்கு காரணம் புன்னை ஒரு கடற்கரை யோர தாவரம் என்பதால்தான்.

திவ்ய பிரபந்த பாடல் பெற்ற தலங்களில் பல கோயில்களிலும் புன்னை வனங்கள் பூத்துக்குலுங்கியதை சிறப்பாய் சொல்லப்பட்டிருக்கிறது.

தேவாரம், திவ்யபிரபந்தத்தில் பல சொற்றொடர்களால் இந்த புன்னை புன்னைகானல் புன்னைத்துறை புன்னைப்பொதும்பர் புன்னையம் நறும் பொழில், புன்னாகவனம், புன்னைவனம் என குறிக்கப்பட்டன என்றும் நீர்நிலை பகுதிகளில் மட்டுமே அதாவது மருதம் நெய்தல் பகுதியில் மட்டுமே புன்னைமரங்கள் நன்கு வளரும் என குறிப்பிடப்பட்டு இருப்பதை கவனியுங்கள்.

குறுந்தொகை (237-34) (311-5) அகநானூறு (126-15,17) (145-12to14) இப்படி கோடையில் கூட குளிச்சியை தரும் இந்த புன்னைமரத்தை சமஸ்கிருத நூலான பிரகத்சம்யிதையிலும் புன்னை மரத்தின் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதைப் பாருங்கள்.

இதன் முக்கியத்துவத்தை உணர இசையிலே கூட புன்னாகவராளி ராகத்தைப்பாடி பயிர்களை கூட நன்றாக வளரச் செய்ய முடியும் இசையால் என அறிவியல் உலத்தையும் ஆழ்ந்து சிந்திக்கவைக்கிறது.

இப்படிப்பட்ட புன்னை மரத்தை ஸ்தூல சூட்சம அடையாளமாய், முத்திரையாய் பெற்று நிற்கும் கற்பக விருட்சம் எனும் அற்புத தேவதாரு மரம் கடலை சார்ந்த பகுதியில் மட்டுமே வளரும் என்பதால் இப்படிப்பட்ட கற்பக விருட்சத்தை பெற்று நிற்கும் அற்புத திருச்சபையை கொண்ட மண் தமிழ்நாட்டு கிழக்கு கடற்கரை சார்ந்த ஊரே. நிச்சயமாய் மலை சார்ந்த குறிஞ்சியோ காட்டைச் சார்ந்த முல்லையோ இல்லை எனலாம் .

இது திட்டவட்ட திடமான உறுதியான கருத்தாய் ஆய்வின் அடிப்படையில் அகப்பட்டு நிற்கிறது.

இப்படி காலத்தையும் இடத்தையும் சிந்தித்த நாம் துவங்கும் செயலைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியுமா.

முதன்முதலில் அந்த இறுதி இறையாளனுடைய திருச்சபையில் எழுப்பப்படும் இறந்தவரைப் பற்றிய செய்திதான் அது. இதுகாறும் பூமிக்கு வந்தவர்கள் தீர்க்கதரிசனத்தை தந்தவர்கள் இறைவன் பூமியில் இல்லாததால் இறைவனுக்கு பதிலாக அவர் அளித்த செய்திகளை ஆன்ம தூதன் மூலமாக பெற்று தூதுவத்துவம் செய்து நின்றார்கள்.

எனவே இதுகாறும் பூமியில் வந்தவர்களில் பலர் இறைதூதர்கள் என்ற அந்தஸ்த்தை பெற்றார்கள். ஆனால் இறுதியில் வருகின்ற ஒருவரே இறைவனோடு பூமியில் இடம் பெறுவதால் இறையாளன் என்ற உயரிய அந்தஸ்திற்கு உரியவர் ஆகிறார்.

எனவே இப்படிப்பட்ட இறையாளனை கொண்ட இறுதிச்சபையில் இறைவன் எழும்பும் நாள் இறைவன் தன் நாளை அறிவிக்கும் நாள் எது என்றால் தன் திருச்சபையில் இறந்தோர்களை எழுப்பும் அற்புத சித்தம் கொண்ட நாள்.

இந்த எழுப்புதல் என்ற வார்த்தையை எல்லா தீர்க்கதரிசிகளும் தெள்ளத் தெளிவாய் சொல்லியிருந்தாலும் அதனுடைய அர்த்தத்தை உட்பொருளை உண்மையை உணர ஏற்றுக்கொள்ள மனமில்லாத சாதாரண மனிதர்களை பார்க்கின்ற பொழுது வேதனைபடுவதா. விவேகமற்றவர்கள் என தூக்கியெறிவதா என்று மனம் சிந்திக்கிறது.

இதைவிட கொடுமை என்ன என்றால் எழுப்புதல் என்ற வார்த்தை தூக்கத்தில் இருந்து எழுப்புவதுபோல் எண்ணிக் கொண்டு. ஆயத்தப் பணிக்காக மக்களை உசுப்பி எழுப்புவதாக நினைத்துக்கொண்டு, சில மதங்களில் எழுப்புதல் மாநாடுகள் ஆங்காங்கேப் போட்டு மக்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றார்களாம்.

இறுதியில் இறந்தவர்களை இறைவன் துணைக் கொண்டு இறுதி இறையாளன் இறந்தவர்களை எழுப்பிக் காண்பிப்பார் என்ற தெளிவுப்பட உள்ள கருத்தை இந்த சமயவாதிகள். மதவாதிகள் போதகர்கள் ஏற்றுக் கொள்ளாமல் பாதகர்களாக இருக்கும் இவர்கள் தங்களை father-ளாக சொல்லிக் கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது.

வள்ளலார் அவர்கள் இறந்தவரை சத்தியம் செய்து இறுதியில் வரும் விமலன் எழுப்புகிறார். நம்புங்கள் நம்புங்கள். உண்மை இது. உண்மை இது. சத்தியமாய் நடக்கும். சத்தியமாய் நடக்கும் என சொன்ன போதும் அந்த வள்ளலார் பாட்டுக்கு உரை எழுதும் ஆசிரியர் சிலர், அவர்களே மனதளவில் அதை ஏற்றுக்கொள்ளாமல் தாங்கள் எழுதும் உரையில் செத்தவர்கள் எழுப்பப்படுகிறார்கள் என்றால இறக்கும் நிலையில் உள்ளவர்கள் குணமடைகிறார்கள் என்று பொருள் தருவதை நினைத்து சிரிப்புத்தான் வருகிறது.

இவர்களுக்கு தன்னையும் அறியாமல் தாங்கள் பிழை செய்து நிற்கிறோம் என்ற உணர்வு வரவில்லை. இவர்களுக்கு மனிதனின் வல்லமையைத் தாண்டி இறைவனின் வல்லமை இல்லை என்று நினைக்கிறார்கள். மனித வல்லமைக்கு அப்பாற்பட்டது இறை வல்லமை என்பதை உணரத் தவறிவிட்டார்கள். உரை எழுதிய ஆசிரியர்கள்.

அது போகட்டும் இந்த எண்ணங்கள் எல்லா மதத்தினரிடையேயும் இருக்கத்தான் செய்கிறது. மனிதனே அனைத்து ஆற்றலும் உடையவன் என்ற எண்ணம் வந்ததால் தானே  இறைமறுப்பு வாத தத்துவங்கள் எல்லாம் பூமியில் வந்து ஆட்டம் போட்டு நின்றன.

இப்படி ஆட்டம் போட்ட இறை மறுப்பு வாதமெல்லாம் விரைவில் ஆட்டம் கண்டு இடம் தெரியாமல் போக இறந்தோரை எழும்பும் நாளை நம்பிக்கை கொண்டோர் ஆவலாய் எதிர்பாருங்கள்.

நிச்சமாய் அந்நாள் மிக விரைவில் இதோ வந்துவிட்டது என்று சொல்லுகின்ற அளவிலே இருக்கிறது நிச்சயமாய். இதற்கான இறந்தோரை எழுப்புதல் பற்றியதை  விளக்கமாய் சொல்ல முயற்சிக்கிறேன் இக்கட்டுரையில்.

எனவே எடுத்துக்கொண்ட தலைப்பை இனி தொடங்கலாம் என நினைக்கிறேன்...

இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல.. சிந்திக்க மட்டுமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.