04/12/2017

இப்படி செய்தால் கர்நாடகம் என்ன, ஆந்திராவே தமிழகத்தை அடிக்க நினைத்தாலும் அடிகலங்கிப் போகும்.. அரசை நம்பாமல் மக்கள் எடுத்த முடிவு..?


ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம் முருங்கத்தொழுவு கிராமத்தில் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குளத்தினை நபார்டு வங்கி துணையுடன் மக்கள் தூர் வாரி சாதனை புரிந்துள்ளனர்.

தண்ணீருக்காகத் தினமும் தெருச்சண்டையில் ஆரம்பித்து, மாநிலங்களுக்கு இடையேயான சண்டைகள் வரை அரங்கேறிக்கொண்டிருக்கும் நம் நாட்டில், குளங்களைப் பராமரித்துப் பாதுகாக்கவில்லையென்றால், நாம் பல்வேறு சிக்கல்களை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். இன்று இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கிணறுகள், ஆழ்துளைக்கிணறுகள் மூலமாக விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீரைச் சேமிக்காமல் போனால், கிணறுகள் நீர்விருத்தி இல்லாமல் வறண்டுபோகும். நம் நாட்டில் மொத்தமுள்ள 5,824 வட்டங்களில், 1,494 வட்டங்களில் நிலத்தடி நீரின் அளவு தொடர்ந்து

உறிஞ்சப்பட்டு, அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டிவிட்டதாக மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது.

மேலும், நிலத்தடி நீரை உபயோகப்படுத்துவதற்கு ஆகும் செலவு பன்மடங்கு அதிமாக உள்ளதால், கிராமத்தில் வாழும் ஏழைகளால் அவற்றை எளிதாகப் பெற முடியாது.

எனவேதான், குளங்களையும் ஏரிகளையும் காப்பாற்றி உத்வேகம் கொடுப்பதற்குப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

தற்போது குளங்களையும் ஏரிகளையும் பராமரிப்பதற்காக அரசால் நிர்வகிக்கப்படும் தனிப்பட்ட துறை எந்த மாநிலத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை.

குளங்களைப் பாதுகாக்க வேண்டிய பொதுப்பணித் துறையும் நீர்ப்பாசனத் துறையும் மாற்றாந்தாய் மனதோடு குளங்களைப் பார்க்கின்றன.

எனவே, குளங்கள் மூலமாக ஏற்படும் நேரடி மற்றும் மறைமுக நன்மைகளைக் கருத்தில் கொண்டு, குளங்கள் மற்றும் சிறிய நீர்நிலைகளுக்காக ஒரு தனி அமைச்சகம் ஒன்றை மத்திய அரசு நிறுவி, அதற்குப் போதுமான நிதி ஒதுக்க வேண்டியது அவசியமாகிறது.

மேலும் நீர்நிலைகள் அமைந்துள்ள இடங்களை ஆக்கிரமிப்பவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கக் கூடிய ஒரு சட்ட வரைவு ஏற்படுத்தப்பட வேண்டும்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் குளங்களை மேலாண்மை செய்வதற்காக விவசாயிகளால் ஏற்படுத்தப்பட்ட ‘குடிமராமத்து’ என்ற அமைப்பு, இன்று பல்வேறு காரணங்களால் மிகவும் வலுவிழந்து காணப்படுகிறது.

இவற்றை வலுப்பெறச் செய்து, குளங்களை நிர்வாகம் செய்யும் முழுப் பொறுப்பையும் அவர்களிடம் கொடுப்பதற்குச் சட்டம் இயற்ற வேண்டியது அவசியம்.

இப்படி ஏதும் அரசாங்கம் செய்யாது என தெரிந்து மக்களே தற்போது இந்த பணிகளை தொடங்கி உள்ளனர்.

இப்படி சிந்தித்ததன் விளைவு தான் ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியம் முருங்கத்தொழுவு கிராமத்தில் அமைந்துள்ள 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் பல நீண்ட வருடங்களாக தூர் வராப்படாமலும் தண்ணீர் வரும் வழிகள் அடைத்துள் பராமரிப்பு இல்லாமல் இருந்தது.

இதனால் இந்த பகுதி மக்கள் குடிநீருக்கு கூட மிகவும் கஷ்டப்பட்டு பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வெள்ளோடு பகுதியில் இருந்து குடிநீர் சப்பளை செய்யும் நிலை தான் இருந்தது.

தற்போது இந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு இந்த குளம் தூர் வாரினால் தான் நம் பகுதியில் குடிநீர் பஞ்சம் தீரும் என முடிவு எடுத்திருந்தனர் அப்போது சென்னிமலையில் செயல்படும் அஸ்வத் தொண்டு நிறுவனம் மூலம் இங்கு விஷ்ணு உழவர் மன்றம் ஆரம்பித்தனர்.

இதை வாய்பாக பயன்படுத்தி நபார்டு வங்கியில் குளம் தூர் வார திட்டம் தயாரித்து ரூ. 26 லட்சம் மதிப்பீட்டில் நபார்டு வங்கிக்கு அனுப்பினர் இதில் நபார்டு வங்கி ரூ 10 லட்சம் தர ஒப்புக்கு கொண்டது.

அதன் பின்பு மக்கள் பங்களிப்புடன் குளம் தூர் வாரும் பணிகளை தொடங்கி ஒரு வருடம் பணி நடந்து மிக நேர்த்தியாக குளம் தூர் வராப்பட்டு விட்டது.

மக்கள் தூர் வாரும் பணி முடியட்டும் என காத்திருந்தது போல மழை பெய்ததை தொடர்ந்து தற்போது குளம் தண்ணீரால் நிரம்பி வருகிறது.

இன்னும் பருவ மழை இருப்பதால் குளம் இந்த ஆண்டு நிரம்பி விடும் என மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

மக்களின் இந்த திட்டத்தினை கேள்விபட்டு பார்வையிட வந்த ஈரோடு தொகுதி எம்.பி., செல்வகுமார சின்னையன் இந்த குளத்திற்கு நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து எல்.பி.பி., வாய்க்கால் கசிவு நீரை பைப் லைன் அமைத்து கொண்டு வரும் பணிக்கு ரூ. 35 லட்சம் நிதி ஒதுக்கி இந்த பணிகளும் விரைந்து நடந்து வருகிறது.

மேலும் இந்த பகுதி மாவட்ட கவுன்சிலர் மணிமேகலை விஸ்வநாதன் அவர்கள் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவராகவும் உள்ளார்.

இவர் ரூ 3 லட்சம் நிதி ஒதுக்க ஒப்புக்கு கொண்டுள்ளார் இதில் குளத்தின் ஒரு பகுதி கரையில் கருங்கற்கள் பரப்பிவிட மக்கள் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.

மக்கள் திவிரமாக பணிகளை தொடங்கிய பின்பு அரசு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் திரும்பி பார்க்கும் கிராம மாக முருங்கத்தொழுவு தலை நிமிர்ந்துள்ளது என்றால் மிகை இல்லை இந்த மழை நீர் இந்த ஆண்டு கோடையை சம்மாளிக்கும் என்பதில் ஐய்யம்மில்லை.

‘நீரின்றி அமையாது உலகு’ என்பதற்கேற்ப, நாம் யாரும் நீரின்றி வாழ முடியாது. இதற்கு எந்தவித மாற்றுப் பொருளும் இதுவரையில் கிடையாது.

எனவே, குளங்களைப் பாதுகாத்து நீரைச் சேமித்து நம் சந்ததியினரும், அவர்களுக்குப் பிறகு வரப்போகும் சந்ததியினரும் வாழ வழிவகுப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.