04/12/2017

தமிழினத் தலைவர் பிரபாகரன் பிடிபடவில்லை அப்போ போர் இன்னும் ஓயவில்லை – சிங்கள இராணுவத் தளபதி...


இறுதி யுத்தம் மாலை 6.00 மணிவரை நீடித்த சண்டையில் இப்போது துப்பாக்கி சத்தங்கள் ஓய்ந்திருந்தன.

தாங்கள் பெரும் எண்ணிக்கையில் பயங்கரவாதிகளை கொன்றுவிட்டதாகவும் இறந்த உடல்களை ஒரு இடத்தில் கொண்டு வந்து போட்டுக் கொண்டிருப்பதாகவும் கமாண்டோ படை கட்டளை அதிகாரி கேணல் ரால்ஃப் நுகேரா எனக்கு அறிவித்திருந்தார்.

அவர்கள் சேகரித்து கொண்டிருக்கும் இறந்த உடல்களை பார்வையிட சென்றிருந்தேன்.
வரிப்புலி உடையில் இருந்த இறந்த உடல்களை சதுப்பு பற்றைக்காடுகளுக்குள் இருந்து கண்டுபிடிப்பது கடினமானதாகவே இருந்தது. 150 உடல்களும் பெரும் எண்ணிக்கையான ஆயுதங்களும் படையினரால் கண்டெடுக்கப்பட்டிருந்தன்.

ஒர் இறந்த உடல் எனக்கு காட்டப்பட்டது. அது புலிகளின் தலைவர் பிரபாகரனுடையது என பலரும் கூறினார்கள். மிக அருகில் சென்று ஆராய்ந்ததில் முகத்தோற்றம், உடல்வாகு என்பன பிரபாகரன் போன்றிருந்தாலும் அது அவரது உடல் இல்லை என உணர்ந்து கொண்டேன்.

எங்களுடன் இருந்த சில புலிகள் இயக்க உறுப்பினர்களை அழைத்துவந்து அந்த உடல் யாருடையது என கண்டறியுமாறு அறிவுறுத்தினேன்.

அவர்கள் உடனடியாகவே அது ”பிரபாகரன் இல்லை என கூறினார்கள்” அதன்பின் வரிசையில் அடுக்கப்பட்டுள்ள ஏனைய உடல்களையும் அடையாளம் காணுமாறு அவர்களை கூறினேன்.

அவர்களும் இராணுவ புலனாய்வாளர்களுடன் இணைந்து அந்த உடல்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கினர். அவர்களின் செய்ற்பாட்டை நான் அருகிலேயே இருந்து அவதானித்து கொண்டிருந்தேன்.

வரிசையில் கிடந்த 5வது உடலை நெருங்கிய போது அவர்களிட்ம் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டதை கவனித்தேன். அந்த உடலின் நிறம், மற்றும் உடல் கட்டமைப்பை வைத்து அது பாணு என அதிசயத்துடன் கூறினார்கள்.

புலிகளின் இராணுவத்தளபதியை கொன்று எங்கள் முன்னேற கிடத்தியிருக்கின்றோம் என்கின்ற வியப்பில் நாம் ஆழ்ந்து போனோம். எங்களது மகிழ்ச்சியை கட்டுப்படுத்த இயலாமல் இருந்தது. ”ஜெயம்”, ”ரட்ணம் மாஸ்டர” என உயர்நிலை புலித்தலைவர்களை அவர்கள் அடையாளம் கண்டனர்.

அடையாளம் காணும் செயல தொடர்ந்த போதே நான் இராணுவ தளபதியை மாலை 6.45 மணி அளவில் தொடர்பு கொண்டேன்.

சார், எமது தாய் நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் இப்போது எமது கட்டுப்பாடுக்குள் வந்துவிட்டது. எல்லாமே முடிந்துவிட்டது என உடனடியாகவே அவருக்கு கூறினேன்.

சில நொடிகள் அமைதியாக இருந்த அவர்.. பிரபாகரன் எங்கே? எனக்கேட்டார்.

சேர், பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை ஆகியோரை தவிர ஏனைய மூத்த புலித்தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். அவர்களின் உடல்கள் இங்கே என்னிடம் இருக்கின்றது என பதிலளித்தேன்.

பிரபாகரன் இறக்கவில்லை என்றால் போரும் முடிந்து விடவில்லை என இராணுவத்தளபதி எனக்கு திருப்பிக் கூறினார்.

அவர் சரியாகத் தான் கூறுகின்றார் என நானும் ஏற்றுக்கொண்டேன்.

புலனாய்வு அமைப்புக்கள் உட்பட யாருக்குமே பிரபாகரன் எங்கு இருக்கின்றார் என தெரிந்திருக்கவில்லை.

அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம். அல்லது எங்கோ இன்னும் பதுங்கி இருக்கின்றார். எப்படியென்றாலும் பிரபாகரன் மரணமடையாமல் எமக்கு அமைதி ஏற்படபோவதில்லை. 

சார் இந்த பகுதி முழுவதுமே எனது படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றது இன்று இரவும் தொடர்ந்து தாக்குதலை நடாத்திவிட்டு நாளை காலையில் மற்றுமொரு தேடுதலை தொடர்கின்றோம்.

இப்போது அந்த சதுப்பு நில பற்றைக்காடுகளுக்கு இருள தொடங்கிவிட்டது என அவருக்கு பதிலளித்தேன்.

போர் இறுதியாக முடிவுக்கு வந்து விட்டது என்கின்ற நினைப்பில் ஏற்கனவே முழு நாடுமே கொண்டாட்டத்தில் இறங்கி விட்டிருந்தது.

கொழும்பு, கண்டி, காலி, மாத்தறை, அனுராதபுரம், போன்ற பெரும் நகரங்கள், இலங்கையின் தொலைதூர கிராமங்கள் வரை எல்லோரும் வீதிகளில் இறங்கி விட்டனர்.

தேசியக்கொடியை காற்றில் அசைய விட்டு ஆட்டமும் , பாட்டமும் கொண்டாட்டமுமாக இருந்தனர். பால்சோறு சமைத்து தமது மகிழ்ச்சியை தடையின்றி கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

மிக நீண்ட கடினமான போரில் ஈடுபட்டதால் எனக்கும், எனது அதிகாரிகளுக்கும், படையினருக்கும் கொண்டாட்டங்களுக்கு முன் சிறிதளவு ஓய்வு தேவையாக இருந்தது. முன்கூட்டியே ஊகிக்க முடியாதளவுக்கு நாடு முழுவதிலும், உலகம் முழுவதிலும் இருந்து நண்பர்களும் நலன் விரும்பிகளும் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்துக்களை கூறினார்கள்.

ஒவ்வொரு அழைப்பும் பிரபாகரன் எங்கே? என்கின்ற கேள்வியுடனேயே முடிந்தது.  எங்களுக்கு தெரியவில்லை என்பதே அவர்களுக்கான எனது உடனடியான பதிலாக இருந்தது.

பல மாதங்களுக்கு பின் அன்று இரவு நான் வசதியாக நித்திரை செய்யக்கூடியதாக இருந்தது. எனினும் எனது உறக்கம் பிரபாகரன் எங்கே? என்கின்ற தொடர்ச்சியான கேள்வியினால் வேட்டையாடப்பட்டு கொண்டிருந்தது.

பிரபாகரன் வேட்டையாடப்பட்டிருந்தால் இங்கே இந்த மண்ணில்தான் எங்கோ இறந்து கிடக்க வேண்டும்.

அப்படியென்றால் தானே இந்த நாட்டின் ஓவ்வொரு அங்குல நிலமும் எமக்கு சொந்தமானதாகும்.

ஆனால் பிரபாகரன் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லையே? இந்த மனவோட்டங்கள் என்னை சீண்டிக் கொண்டும் பலமணி நேரத்துக்கு புரட்டிப் போட்டுக் கொணடும் இருந்தன.

இறுதியாக அதிகாலை நேரத்தில் ஆழ்ந்து உறங்கிப் போனேன்.

இன்னும் தொடர்கின்றது பிரபாகரன் என்ற மர்மம்…..

-மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண (இலங்கை ராணுவ கட்டளை தளபதி)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.