31/12/2017

குண்டலினி யோகம்...


விந்து, நாதம் இவைகளை ஆதாரமாகக் கொண்டே இந்த உடல் உருவாகி, வளர்ச்சி பெற்று, இயங்கிக் கொண்டு இருக்கிறது.

அதேபோல் அறிவும் உடலை ஆதாரமாகக் கொண்டு இயங்கினாலும் கருவையே மூலமாகக் கொண்டு இயங்குகிறது.

திரியை மூலமாகக் கொண்டே விளக்கு எரிவது போல் - வெளிச்சம் தோன்றுவது போல் - வித்தை ஆதாரமாகக் கொண்டே உடலியக்கம் நடைபெறுகிறது. அறிவியக்கம் நடைபெறுகிறது.

அறிவின் பிறப்பிடமாகிய கருவில் ஞாபகத்தை ஒருங்கச் செய்து அங்கேயே ஒன்றி ஒன்றிப் பழக்கம் செய்து கொள்ளும் முறையே தவம் எனப்படும்...

சம்பவக் கற்பனைகள், சம்பவ ஞாபகங்கள் என்னும் எண்ண அலைகளின் மூலம் உடலில் விளையும் உயர்தரமான காந்த சக்தி சூழ்நிலைக் கவர்ச்சியால் வீணாகிக் கொண்டே இருக்கிறது.

எண்ணங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இந்தச் சக்தி உடலில் சேகரமாகி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கிறது.

அதைத் தாங்கும் வன்மையும் உடலுக்கு ஏற்படுகிறது. அதனால் அறிவுக்கு நட்பும், உறுதி, ஆராய்ச்சி வேகம் கூடிக் கொண்டே இருக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.