30/01/2018

கோவையில் பட்டதாரிகள் உருவாக்கிய புதிய டாக்ஸி சேவை...


கோவையைச் சேர்ந்த 6 பட்டதாரிகள் OLA மற்றும் UBER டாக்ஸி நிறுவங்களுக்கு போட்டியாக, புதிய டாக்ஸி சேவையை தொடங்கவுள்ளனர்.

கோவை ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 6 பட்டதாரிகள் ஒன்று சேர்ந்து, “MyDriverz” என்னும் புதிய டாக்ஸி சேவையை தொடங்கவுள்ளனர். இந்த டாக்ஸி சேவையை OLA மற்றும் UBER ஆகியவை நிறுவனகளுக்கு கடுமையான போட்டியை விளங்க வாய்ப்பு உண்டு.

சமீபத்தில், தனியார் டாக்ஸி நிறுவனத்தின் டாக்ஸி டிரைவர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்கள், நியாயமான கட்டணத்தில், மக்களுக்கு சிறந்த சேவை வழங்க “MyDriverz” தொடங்க இந்த இளம் பட்டதாரிகளை தூண்டியது.

“OLA” மற்றும் “UBER” டாக்ஸி சேவை நிறுவங்கள்,வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூல் செய்கிறார்கள். எனவே,கமிஷன் வாங்காத டாக்சி சேவை ஆப்பை உருவாக்க முடிவு செய்தோம். டாக்ஸி ஓட்டுனர்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு சவாரிக்கும், எந்த கமிஷனும் வசூலிக்கப்படமாட்டாது.

ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும்.மேலும் டாக்ஸி ஓட்டுனர்கள், அந்த குறிப்பிட்ட தொகையை மட்டும் நிறுவனத்திற்கு செலுத்தவேண்டும். தற்போது ஆட்டோ ரிக்க்ஷாவின் ஓட்டுநர்கள், ஒவ்வொரு மாதத்திற்கு 700 ரூபாயும், டாக்ஸி ஓட்டுனர்கள் 1,000 ரூபாயும் செலுத்தவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர்களுக்கு அடையாள அட்டைகள், மற்றும் Zero Balance Bank Account இருக்கும்.

“MyDriverz” டாக்ஸி சேவையில் நிலையான கட்டணம் இருக்கும்.கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படமாட்டாது. மேலும்,ஆட்டோரிக்ஷா மற்றும் டாக்ஸிகளுக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் குறித்து நாங்கள் ஓட்டுனர்களுடன் கலந்துரையாடிய பிறகு முடிவெடுக்கப்பட்ட கட்டணங்கள் இருக்கும் என்று நிர்வாக இயக்குனர் என். வரதராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும்,இந்த பட்டத்தாரிகள் “Lakshmi People Service” என்ற நிறுவனத்தை தொடங்கி பள்ளி மேலாண்மை பயன்பாடு மென்பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த மென்பொருளை ரூ15,000க்கு பள்ளிகளுக்கு விற்பனை செய்தார்கள். தற்போது,இந்த மென்பொருள் சேலம் நகரிலுள்ள சுமார் 120 பள்ளிகளில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.