07/02/2018

உடல் பருமனா? வயிற்று பிரச்சினையா.. கொள்ளு ரசம்...


கொள்ளு-600 கி.
வெந்தயம்-100 கி.
மல்லி-100 கி.
சுக்கு-100 கி.
சீரகம்-50 கி.
பட்டை-50 கி.

இவற்றை ஒவ்வொன்றையும் தனித்தனியே பொன்நிறமாக வறுத்து தனித்தனியே பொடி செய்து பின்னர் ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு 200 மில்லி நீரில் 2 டீஸ்பூன் பொடிய கலந்து 100 மில்லியாக சுண்டக்காய்ச்சி வெறும் வயிற்றில் காலை, மாலை (சாப்பாட்டிற்கு 45 நிமிடங்களுக்கு முன்பாக) இருவேளை அல்லது 3 வேளை குடித்தால் உடல் எடை குறைந்து தொப்பை குறைந்து வயிற்று பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

உடல் பருமனா? உங்களுக்கான டயட்...

20 வயது முதல் 30 வயது உடையவர்கள் தான் தற்போது ஒல்லியான உடலுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலைக் குறைப்பதற்காக மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொண்டு, பட்டினி கிடக்கின்றனர். பட்டினி கிடந்தால் உடல் குறைந்து விடும் என்பது தவறான கருத்து. இது உடலை பலவீனமாக்கி விடும். மாத்திரைகளும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். உடல்பருமனை குறைக்க முறையான உடற்பயிற்சியோடு உணவுக்கட்டுப்பாடு அவசியம்.

ஒருநாளைக்கு நம் உடலுக்குத் தேவையான சரிவிகித உணவு என்னென்ன?

காலை 6 மணி : டீ ,காஃபி அல்லது ஏடு நீக்கப்பட்ட பால் அரை கப் (100 மி.லி.) அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை மட்டுமே சேர்க்க வேண்டும்.

9 மணி : 2 இட்லி அல்லது இரண்டு தோசை, ஒரு கப் உப்புமா அல்லது ஒரு கப் பொங்கல். இதோடு தேங்காய் சேர்க்காத சட்னி வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

11 மணி : மோர் ஒரு கப், எலுமிச்சை ஜூஸ் ஒரு கப், தக்காளி ஜூஸ் ஒரு கப் இவற்றில் ஏதாவது ஒன்றை இரண்டு டீஸ்பூன் சர்க்கரை அல்லது சிறிது உப்பு கலந்து பருகலாம்.

மதியம் 1 மணி : எண்ணெய் இல்லாத சப்பாத்தி 2 அல்லது ஒரு கப் சாதத்தை கீரை, காய்களிகள் , ரசம் ஆகியவற்றோடு கலந்து சாப்பிடலாம். சாப்பிட்டு ஒருமணி நேரம் கழித்து இளநீர் சாப்பிடலாம்.

மாலை 4 மணி : காபி, டீ குறைந்த அளவு சர்க்கரையுடன் சாப்பிடலாம்.

மாலை 5.30 மணி : ஆப்பில், கொய்யா, மாதுளை இவற்றில் ஏதாவது ஒன்றுடன் வேகவைத்த சுண்டல் ஒருகப் சாப்பிடலாம்.

இரவு 8 மணி : காய்கறி சூப், எண்ணெய் இல்லாத சப்பாத்தி அல்லது பருப்பு, கோஸ் பொரியலுடம் ஒரு கப் சாதம் சாப்பிடலாம். படுப்பதற்கு முன் ஏதாவது பழம் சாப்பிடலாம். வாழைப்பழம் உடல்பருமனுக்கு நண்பன் என்பதால் அதை தவிர்த்து விடலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.