16/03/2018

ஒரே நபர் ஒரே நேரம் ஆனால் வெவ்வேறு இடங்கள் எனும் அமானுஷ்யம்...


அல்ஃபோனா (Alfonso) இத்தாலியில் வாழ்ந்த கிறிஸ்தவ மதகுரு, 22/9/1774 ஆம் ஆண்டு இத்தாலியில் இருந்த பலஸ் தெல் கொதி இல் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தியானித்துக் கொண்டிருந்தார்.

சற்று நேரம் வெளியில் வந்து, அங்கிருந்த மக்களை பார்த்துவிட்டு மீண்டும் அறைக்குள் சென்றார்.

சற்று நேரத்தில் திரும்பி வந்து போப் சற்று முன்னர் இறந்து விட்டார் என அறிவித்தார்…

அனைவருக்கும் ஆச்சரியம், பலர் நம்பவுமில்லை…

போப் இருப்பது ரோம் நகரில், அதாவது அந்த காலப்பகுதியில் இவர்கள் இருந்த இடத்தில் இருந்து ஒரு நாள் பயணம்..

மறு நாள்… ரோமில் இருந்து உத்தியோக பூர்வமாக போப் இறந்த தகவல் அந்த நகருக்கு வந்தது.

அனைவருக்கும் ஆச்சரியம், எப்படி இங்கிருந்தபடியே அல்ஃபோனால் அந்த தகவலை கூறமுடிந்தது? உள் உணர்வாக இருக்கும் என முடிவெடுத்தவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சிதகவல் கிடைத்தது.

போப் இறந்த போது அங்கிருந்த சூழ் நிலை பற்றிய தகவல்கள் கிடைக்கத் தொடங்கின.

அதில், போப் இறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அங்கு வந்த அல்ஃபோனா அவரின் அருகில் இருந்து ஜெபம் (செபம்) செய்ததாக உறுதியான தகவல்கள் கிடைத்தன...

இது எப்படி? ஒரே நபர் ஒரே நேரத்தில் பல கிலோமீட்டர் தூர இடைவெளியில் உள்ள இருவேறுபட்ட இடங்களில் இருக்க முடியும்?

இது தான் Bilocation (இரட்டை மனை) எனப்படும் மர்மம்..

மேலே நாம் பார்த்தது வரலாற்று பதிவில் இடம்பெற்ற ஒரு சம்பவம். இது மட்டும் தானா?

சமீபத்தில் 2000 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஒரே நபருக்கு இடம்பெற்ற இருசம்பவங்களை பார்ப்போம்…

அமெரிக்காவில் Wisconsin பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம்… தாய், தந்தை, சித்தி மற்றும் இரு பிள்ளைகள் அடங்கிய ஒரு குடும்பம்.

ஒரு நாள், மூத்த மகள் தனது நண்பியின் வீட்டில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்து கொள்ள சென்றிருந்தால்.

தாய் தனது வீட்டு வேலைகளை முடித்து விட்டு தூங்குவதற்காக கட்டிலுக்கு சென்றால். அங்கு அவர் கணவர் ஏற்கனவே தூக்கத்தில் இருந்தார். பல நிமிடங்கள் ஆகியும் தாயாருக்கு தூக்கம் வரவில்லை. எதேச்சையாக அறையைவிட்டு வெளியேறினார். வெளியே, மின் விள‌க்குகள் எரிந்து கொண்டிருந்தன… வீட்டு வாசல் கதவை அவரது மகள் பூட்டிக்கொண்டிருந்தாள்.  நேரம் கடந்துவிட்டது போய் தூங்கு… என சொல்லி விட்டு தாயார் அடுப்படிக்கு சென்றார். ஆனால், கதவைப்பூட்டிய தனது மகளின் முகத்தில் ஒரு வித்தியாசம் இருந்ததை உணர்ந்தார். அதனால், மகளின் அறைக்கு சென்றார். அங்கு மகள் இல்லை..

மீண்டும் மகள் வெளியே சுற்ற சென்று விட்டாள் என ஆத்திரம் அடைந்த அவர், தனது மகளின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்றுக்கொண்ட அவரது மகள் தான் இன்னமும் நண்பியின் வீட்டில் இருப்பதாக கூறினாள். தாயாரால் நம்ப முடியவில்லை. அவளது நண்பியின் தாயாரிடம் கைபேசியை கொடுக்கும்படி கூறினார். அவரது தாயாரும் அந்தப் பெண் மாலையில் இருந்து அங்கேயே இருப்பதை உறுதிப்படுத்தினார்.
இவரால் நம்ப முடியவில்லை. அவர்களது வீட்டு தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தினார். அவரது மகளே அந்த தொலைபேசி அழைப்பையும் எடுத்தாள்…

எப்படி? தனது மகள் வெளியில் இருப்பதை நினைத்துக் கொண்டிருந்த அந்த தாயாருக்கு அந்த நினைவலைகள் உருவமாக பரிணமித்தனவா… என சிந்தித்தால், இதுவரை நினைவலைகள் பற்றி வெளியான அனைத்து ஆராய்வு முடிவுகள் மற்றும் சம்பவங்கள் அந்த உருவங்கள் மங்களாக தெளிவற்று தெரிவதை உறுதிப்படுத்தியுள்ளன.

ஆனால், இந்த சம்பவத்தில் வீட்டு கதவை திறந்து பூட்டியுள்ளார். எந்த வித மங்களும் இல்லை. வீட்டு மின் விளக்குகள் கூட அந்தப் பெண்ணால் போடப்பட்டவை தான்..

இதே குடும்பத்தில் அடுத்த சம்பவம்…

விடுமுறை நாள் ஒன்றில், அந்த குடும்பத்தின் இரண்டாவது மகள் குளிரான காலைப்பொழுதில் வீட்டிற்கு வெளியே குளிர் அங்கி அணியாது சென்றுகொண்டிருப்பதை பார்த்த சித்தி, மேல் மாடியில் இருந்த படியே அவளது தாயாருக்கு தகவல் கொடுத்தார். தாயாரும் அதை பார்த்தார். என்றாலும் தனது மகளுக்கு அவ்வாறான தட்ப வெப்ப நிலையில் செல்வது பிடிக்கும் என்பதால் அவர் அந்த தகவலை பெரிதாக கருதாமல், தொலைக்காட்சி பார்பதற்காக இருக்கையில் அமர்ந்தார். அமர்ந்து அடுத்த கணம், மேல் மாடியில் இருந்து, அப்போது தான் படுக்கையில் இருந்து எழுந்த உடையுடன் அவரது மகள் வந்தார்…

இக் குடும்ப சம்வத்தில் முதல்கூறிய சம்பவத்தின் உறுதிக்கு பெரிதாக சான்றுகள் இல்லை… ஆனால் இரண்டாவது சம்பவத்திற்கு, அருகில் இருந்த வீட்டாரும் சாட்சி..

எப்படி இவை சாத்தியம்?

இவை இயற்கையானதா? நம்மாளும் முடியுமா?

போன்ற கேள்விகளுக்கான விளக்கங்களுடனும் மேலும் எமது சமுதாயத்தோடு தொடர்புடைய ஒரு சம்பவத்தையும் பார்க்கலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.