21/03/2018

திராவிடத்துக்கு திராவிட போர்வையில் ஆதிக்கம் செய்யும் தெலுங்கு இனத்துக்கு தமிழனை காட்டி கொடுத்து தமிழனை விற்று பிழைத்து கொண்டு திராவிட ஆதரவில் இருந்து கொண்டு திராவிட பிரசாரம் செய்யும் தமிழ் இனத்தில் பிறந்த தமிழ் கூட்டங்கள் பார்வைக்கு...


கருணாநிதி ஒரு தெலுங்கர். தி.மு.க.விலிருந்து விலகியபோது, எம்.ஜி.ஆரும் இதைச் சொன்னார். அவர் தெலுங்கர் என்பதால்தான் தி.மு.க.வில் தெலுங்கு பேசும் ஏழு பேர் அமைச்சர்களாக இருக்காங்க. தமிழர் என்ற உணர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே தென்னிந்தியர்களைக் குறிக்கும் திராவிடன் என்ற வார்த்தையை தமிழனுக்கும் சூட்டிவிட்டார்கள்’’ என்று பரபரப்பு குண்டுகளை வீசியிருக்கிறார், குடும்பப்பட இயக்குநர் வி.சேகர்.

சென்னையில் பத்திரிகையொன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வி.சேகர், ‘‘தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும்னு தயாரிப்பாளர் சங்கத்தில் நான் சொன்னபோது, அங்கிருந்த சிலர் கேலியா சிரிச்சாங்க. கொஞ்சம் கவனிச்சப்பதான் புரிஞ்சது, சிரிச்சவங்க யாருமே தமிழர்களே இல்லன்னு. தயாரிப்பாளர் சங்கத்தோட உயர் பொறுப்புகளில் எப்பவுமே தெலுங்கரும், மலையாளியும், கன்னடரும் தான் இருக்கிறாங்க. இதுதான் தமிழ்த்திரையுலகின் பரிதாபநிலை.

ஒரு காலத்தில இந்தியா முழுக்க இருந்தவங்கதான் தமிழர்கள். தென்னிந்தியாவில் இருந்த ஒரு பிரிவினரை மட்டும்தான் திராவிடர்னு சொல்லு வாங்க. தமிழனும் திராவிடம்தான்னு பொய் சொல்லிட்டாங்க. பெரியார் சொன்னதுக்காக தமிழன், திராவிடன் ஆகமாட்டான். என் தாத்தாவுக்கு குடுமி இருந் துச்சுங்கறதால நானும் குடுமி வைச்சுக்க முடியாது’’ என்றவர், அடுத்ததாக பேசியதுதான் எல்லோரையும் கூர்ந்து கவனிக்க வைத்தது.

‘‘ஐதராபாத் போயிருந்த போது ஒரு தெலுங்கன், ‘எங்க ஆளுதான் உங்க தமிழ்நாட்டின் முதல்வர்’னு சொன்னான். நானும் புரியாம, ‘இதுக்கு முன்னாடி இருந் தவங்கதான் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவங்க. இப்போ இருக்கற கலைஞர் தமிழர்தானே’ன்னு சொன்னேன். அதுக்கு அவன் சிரிச்சிட்டே, ‘யாரு சொன்னா கருணாநிதி தமிழர்னு? அவரு தெலுங்கர்’னு அடிச்சு சொன்னான்.

அப்புறம் விசாரிச்சாத்தான் புரியுது. தி.மு.க.வில இருந்து எம்.ஜி.ஆர். பிரிஞ்சபோது, அவரைப் பார்த்து ‘மலையாளி’ன்னு கலைஞர் திட்டினாரு. உடனே அதுக்கு எம்.ஜி.ஆர், ‘ஆமா நான் மலையாளிதான். ஒத்துக்கறேன். ஆனா தமிழ்நாடும், கேரளாவும் ஒரு காலத்தில ஒண்ணா இருந்துச்சு. ஆனா, நீங்க தெலுங்கர். ஆந் திரா என்னைக்கும் தமிழ்நாட்டோட சேர்ந்து இருந்தது கிடையாது’ன்னு பதிலடி கொடுத்தாரு. இப்பத்தான் புரியுது எம்.ஜி.ஆர். சொன்னது சரிதான்.

உள்ளே இருந்திட்டே கருணாநிதி நெறைய வேலை பாக்கறாரு. அதனாலதான், தெலுங்கைத் தாய் மொழியா பேசற ஏழு பேர் தமிழ்நாட்டில அமைச்சர்களா இருக்காங்க.

கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் தமிழ் பேசற யாராவது எம்.எல்.ஏ.வாகக் கூட இருக்க முடியாதே!’’ என்று சேகர் சொன்னதும், கூட்டத்தில் இருந்த ஒருவர், ‘‘டெல்லியிலயும் தெலுங்குக்காரர் நடிகர் நெப்போலியன்தான் தி.மு.க. சார்பில் மத்திய அமைச்சரா இருக்காரு’’ என்று எடுத்துக் கொடுத்தார்.

அடுத்து பேசிய பெ.மணியரசன், வி.சேகர் பேசிய பேச்சுகளுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, ‘‘ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மரணத்துக்கு தமிழ்நாட்டில் முதல்வர் கருணாநிதி விடுமுறை அறிவிச்சாரு. கேரள எல்லையில இருக்கிற தமிழர்கள் பொங்கல் விடுமுறை கேட்டு அங்கே உண்ணாநிலை இருந்தபோது, அம்மாநில காவலர்களால் தாக்கப்பட்டாங்க. ஆனால், மலையாளிகளின் வாக்குகளைக் குறி வைச்சு ஓணம் பண்டிகைக்கு கோவை மாவட்டத் துக்கு அரசு விடுமுறை அறிவிச்சவர், கருணாநிதி.

இப்போ, ஓணம் பண்டிகைக்கு சென்னையிலும் அரசு விடுமுறைன்னு அறிவிச்சிட்டாரு. தமிழர் நலனைக் குழி தோண்டிப் புதைப்பதில் கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் உள்ள வித்தியாசம் வேட்டிக்கும், சேலைக்கும் உள்ள வித்தியாசம் தான்’’ என்றபோது கூட்டம் ஆர்ப்பரித்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.