19/06/2018

தேனி மேகமலையில் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன், 33 பேர் படுகாயம்...


தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள மேகமலையில் இன்று மாலை சுற்றுலா வேன் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணித்த 33 பேர் படுகாயமடைந்தனர்...

சின்னமனூரை அடுத்த உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர்கள் வேன் ஒன்றின் மூலம் மேகமலைக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது ஒரு வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் மேகமலை பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் வேனில் பயணித்த 33 பேரும் படுகாயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்தளங்களில் ஒன்றான மேகமலைக்கு சுற்றுலா சென்ற வேன் 500 அடி பள்ளத்தில் கழிந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களில் பெண்களும், குழந்தைகளுமே அதிகம் என்று சொல்லப்படுகிறது. மேலும், அவர்களில், 5 பேரின் நிலைமை மோசமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்..

காயமடைந்தவர்கள் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த 5 பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னர், தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட இருக்கிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.