20/07/2018

கான்ட்ராக்டர் செய்யாதுரை வீட்டில் 36 மணி நேரம் நடந்த வருமான வரி சோதனை நிறைவு! சிக்கிய தங்கம், பணம்...


ஆபரேஷன் பார்க்கிங் என்ற பெயரில் அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக செய்யப்பட்ட வருமான வரி சோதனை 36 மணி நேரத்திற்கு பின் முடிவரிக்கு வந்துள்ளது. இதன் மூலம் கைப்பற்றப்பட்ட பணம், நகைதான் இந்திய வரலாற்றில் வருமான வரி சோதனை மூலம் அதிகம் கைப்பற்றப்பட்ட சொத்து ஆகும்.

ரெய்டு.. ரெய்டு.. ரெய்டு கடந்த ஜனவரியில் இருந்து இந்த ஜூலை வரை தமிழகத்தில் அதிக உச்சரிக்கப்பட்ட வார்த்தை இதுதான். தமிழக எடப்பாடி- ஓபிஎஸ் டீம் அரசுக்கு எதிராக இருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட ரெய்டு தற்போது எடப்பாடிக்கு நெருக்கமானவர்களிடமே நடத்தப்பட்டு வருகிறது. கிறிஸ்டி நிறுவன ரெய்டு மூலம் அரசுக்கு நெருக்கமான புள்ளிகள் குறிவைக்கப்பட்டார்கள். சத்துணவு துறை போய் தற்போது அருப்புக்கோட்டை வருமான வரி சோதனை மூலம், நெடுஞ்சாலை துறை மீது குறி மாற்றப்பட்டுள்ளது.

யார் இவர்கள் அருப்புக்கோட்டை அருகே இருக்கும் கீழ்முடி மன்னார் என்று சிறிய கிராமத்தை சேர்ந்தவர்தான் செய்யாதுரை. ஐவரும் இவரது மகன் நாகராஜும் இணைந்து எஸ்பிகே என்று கட்டுமானப்பணி ஒன்றை நடத்தி வருகிறார்கள். பெரிய அளவில் வெளியே தெரியாத இந்த நிறுவனம்தான் தமிழக நெடுஞ்சாலை துறைக்கு ஒப்பந்த முறையில் சாலை முதற்கொண்டு பல கட்டுமான பணிகளை செய்து தருகிறது.

என்னதான் பிரச்சனை இந்த நிலையில் இந்த நிறுவனம் கட்டுமான துறை மட்டுமில்லாமல் நூற்பு ஆலை, கல்குவாரி, உள்ளிட்ட இதர சில அரசு ஒப்பந்தகளையும் பெற்று நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனம் கடந்த சில வருடமாக மோசடி செய்து பணம் பெறுவதாகவும், சரியாக வருமான வரி செலுத்தவில்லை என்றும், புகார் புகார் மேல் புகார் வந்திருக்கிறது.

அதனடிப்படையிலேயே தற்போது வருமான வரி சோதனை நடந்துள்ளது. எவ்வளவு நேற்று அதிகாலை ஆரம்பித்த இந்த சோதனை இப்போது வரை தொடர்ந்து நடந்து வருகிறது. 1000க்கும் அதிகமான அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். அருப்புக்கோட்டையில் உள்ள செய்யாதுரையின் பூர்வீக வீடு தொடங்கி மொத்தம் 30 இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனைக்கு ஆப்ரேஷன் பார்க்கிங் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பணம் எவ்வளவு இந்த சோதனையில் வெறும் இரண்டு நாட்களில் ரூ.160 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

அதேபோல் வெவ்வேறு இடங்களில் இருந்து 100 கிலோவிற்கும் அதிகமான புது தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் எல்லாம் புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது . 300க்கும் அதிகமான சொத்து பத்திரமும், 250 பென் டிரைவுகளும், 56க்கும் அதிகமான ஹார்ட் டிஸ்க்குகளும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. மிக பெரியது இந்திய வரலாற்றில் இதுதான் மிகப்பெரிய வருமான வரி சோதனை ஆகும்.

சசிகலா குடும்பங்களுக்கு சொந்தமான இடங்களில் மொத்தம் 200க்கும் அதிகமான பகுதிகளில் சோதனை செய்யப்பட்டது. கணக்குப்படி அதுதான் பெரிய சோதனை என்றாலும், இதுவரை எந்த இடத்திலும் இவ்வளவு அதிக பணம் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் முறைப்படி இதுதான் பெரிய சோதனை என்கிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.