20/07/2018

திருமண வரவேற்பு பத்திரிகையில் காய்கறி விதை... அசர வைத்த கேரள எம்.எல்.ஏ...


கேரளத்தில் எம்எல்ஏ ஒருவரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட பத்திரிகை மிகவும் வித்தியாசமாக இருந்தது.

தானூர் தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏவாக இருப்பவர் வி. அப்துல் ரஹிமான். இவரது மகள் ரிஸ்வானாவுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணத்துக்கு வராதவர்களுக்காக வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடத்த எம்எல்ஏ முடிவு செய்தார். மலப்புரத்தில் வரும் 22-ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். 100 சதவீதம் அதற்கு வரும் சிறப்பு விருந்தினர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அழைப்பிதழ் அனுப்ப முடிவு செய்தார்.

அதன்படி கையால் தயாரிக்கப்பட்ட பேப்பரில் பூக்கள் மற்றும் மூலிகை விதைகள் தூவிய அழைப்பிதழை தயார் செய்தார். அந்த பேப்பர் முழுக்க முழுக்க மறுசுழற்சி செய்யப்படக் கூடியது. குப்பைக்கு செல்லும் கார்டுகள் இதுகுறித்து எம்எல்ஏ அப்துல் ரஹிமான் கூறுகையில் திருமண அழைப்பிதழ்களை அன்பு பொங்க கொடுக்கிறோம். ஆனால் திருமணம் முடிந்தவுடன் அந்த அழைப்பிதழை குப்பையில் வீசி விடுகின்றனர். ஐடியா இதை தடுப்பதற்காகவே பெங்களூரில் உள்ள எனது நண்பருடன் ஆலோசனை செய்தபோது இந்த ஐடியாவை கொடுத்தார். இதை கேட்டவுடன் எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. அந்த அழைப்பிதழில் கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, மேரிகோல்டு பூ ஆகியவை கோட் செய்யப்பட்டுள்ளது. முளைவிடும் இந்த கார்டில் உள்ள விதைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்பு அதில் இருக்கும். அந்த கார்டில் லேசாக மணல் இருக்கும் அதில் தண்ணீர் தெளித்தால் முளை விட தொடங்கும். தூக்கி எறியமாட்டார்கள் பின்னர் அதை தொட்டியிலோ அல்லது தோட்டத்திலோ வைத்துக் கொள்ளலாம். இந்த அழைப்பிதழை யாரும் குப்பையில் போட மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தாங்கள் பயன்படுத்தா விட்டாலும் வேறு யாருக்காவது கொடுப்பர் என்றார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.