20/07/2018

பென்னாகரம் மின்சார வாரியத்தில் அதிகமாக லஞ்சம் வாங்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு...


தர்மபுரி மாவட்டம்   பென்னாகரத்தில்  மின்வாரியத்தில்  ciஆக பணிபுரியும்  காசி பூந்தோட்ட மோட்டார்  சர்வீஸ்  வாங்கி தருவதாக  கூறி சத்தியநாத புரம் கிராமத்தில் வசிக்கும்  முருகன் என்பவரிடம்  ரூபாய் 40,000ஆயிரம்  பணத்தை பெற்றுக் கொண்டு   அலுவழகத்திற்கு தெரியாமல்   பூந்தோட்ட மோட்டார்    சர்வீஸ் வழங்கியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அனுமதி இல்லாமல் சர்வீஸ் வழங்கியது  தெரியவந்தது.

இதனையடுத்து அதிகாரிகள் அந்த  மோட்டார்  இணைப்பை துண்டித்து உள்ளனர். இதைக்கண்ட முருகன் நான் ci காசிக்கு 40 ஆயிரம் பணம் கொடுத்து சர்வீஸ் வாங்கியதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார். மேலும்  இதுகுறித்து  பொதுமக்கள்   கூறுகையில் ci காசி என்பவர் பெரும்பாலையில் உள்ள மின்சார வாரியத்தில்  பணிபுரிந்தபோது அதிகமாக லஞ்சம்  வாங்கியதாக அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனால் இவரை ஏரியூர் மின்சார வாரியத்திற்கு  பணிஇடமாற்றம் செய்யப்பட்டது.

மேலும்  இதே பிரச்சனை  காரணமாக பென்னாகரம்  மின்சார  வாரியத்திற்கு  மாற்றப்பட்டது.அங்கு முருகனை போன்ற  பல்வேறு  பொதுமக்களிடம்  மின்இணைப்பு வழங்குவதற்கு   அதிகமாக லஞ்சம் வாங்குவதாகவும் அதில் பாதி பணத்தை  உயர்அதிகாரிக்கு வழங்குவதாகவும்  தெரிவித்தனர். மேலும்  பாதிக்கப்பட்ட முருகன்  மேல் அதிகாரிகளிடம்  காசி மீது மனு அளித்துள்ளார். பிறகு  முருகனையும்   காசியையும் அழைத்து  சமரச பேச்சுவார்த்தை  உயர் அதிகாரிகள்  நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவர் மீது விசாரணை செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.