21/07/2018

உலக வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட பெண் ஆய்வாளர்கள் யாரால் ஏன்?



மதங்கள் பெண்களை அடிமைப்படுத்துகிறதா?

ஒரு மரியாதைக்குரிய நபர் திராவிட கொள்கையில் ஈடுபடுத்தி கொண்டவர் சில தினங்களுக்கு முன்பு மதங்களின் பார்வையில் பெண்கள் என்ற புத்தகத்தை வாசித்ததாகவும்.

 அதில் உலகிலுள்ள அத்தனை மதங்களும் பெண்களை இழிவுபடுத்தியதாகவும்
அடிமைப்படுத்தியதாகவும் குறிப்பிட்டு அந்தந்த மத நண்பர்களையெல்லாம் டாக் செய்து காரசாரமான விவாதம் செய்தார்.

அவருக்கான பதிலாகவும் இன்னும் மதங்கள் பெண்களை அடிமைப்படுத்துவதாக கூறும் அத்தனை பேருக்கான பதிலாகவும் இந்த பதிவை எழுதுகிறேன்.

எகிப்தில் கி.பி. 370 ல் வாழ்ந்த ஒரு பெண் தான் HYPATIA .

இந்த பெண் நட்சத்திரங்கள், கிரகங்கள் சூரியன் இவைகளின் நிலைகளை அளக்கும் கருவிகளை கண்டுபிடித்தார்
(scientific instruments including plane astrolabe).

ஆனால் இந்த பெண்ணை அன்றைய ஆண் மேலாதிக்கம் வெளியே விடவில்லை முடிவு.

 காலப்போக்கில் இவர் யார் என்றே அடையாளம் தெரியாத அளவுக்கு மறக்கடிக்கப்பட்டார்.

அதுமட்டுமல்ல அன்றைய காலத்தில் உள்ள ஆண்கள் கடவுளுக்கு எதிராக பேசிவதாக கூறி அடித்தே கொலை செய்தனர்...

அடா லொலாஸ்..

என்ற பெயரில்  1815 ல் இங்கிலாந்தில் வாழ்ந்துள்ளார் இவர் கால்குலேட்டர் போன்ற ஒரு கருவியை கண்டு பிடித்துள்ளார் ஏறக்குறைய கணினி போன்ற அமைப்பு அதுமட்டுமல்ல இவரே முதலாவது கம்யூட்டர் ப்ரோகிராமர் என்று இப்போது உள்ள சில அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இவரது ஆய்வை சமர்ப்பிக்க வேண்டிய தருணத்தில் திடீரென இவரது ஆய்வுக்கு தடை விதிக்கப்பட்டது.

பல போராட்டங்கள் நடத்தியே இவரது ஆய்வை வெளியிட அந்த நாடு அனுமதித்தது .

அப்படி என்னதான் போராடி இருக்கும் இந்த பெண்?

வேறென்ன அந்த பெண்ணின் பெயரை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது

A என்ற தனது பெயரின் முதல் எழுத்துடன் (இனிஷியலுடன்) இந்த ஆய்வு வெளியே வந்தது.

அதோடு இந்த பெண் விஞ்ஞானி உலகில் மறைக்கப்பட்டு விட்டார்..

இன்னும் பல..

 இது அவ்வளவும் ஆணாதிக்கத்தின் பெயரில் நடந்தேறியது.

ஒரு பெண் எப்படி விஞ்ஞானியாக முடியும் என்ற கர்வம் தான்..

மதங்கள்  பெண்ணை அடிமைபடுத்துகிறது என்றால்

மோசேவுக்கு இருந்த ஒரு சகோதரியை பற்றியோ

இயேசுவுக்கு இருந்த தாய் மரியாவை பற்றியோ

தந்திரா ஞானி திலோபாவுக்கு இருந்த தாகினி என்ற  ஒரு பெண்

மஹாவீரருக்கு  மனைவியாக ஒரு பெண்

தந்திரா தத்துவங்களை சஹாரா முனிவருக்கு போதித்தது ஒரு பெண் தான்

முஹம்மது நபிக்கு அவர் கொள்கைக்கு முதலில் உதவியது அவரது மனைவியான கதீஜா என்ற பெண். .

இவ்வளவு பெண்கள் பற்றி அந்தந்த மதத்தில் உள்ள வரலாறு பேசவேண்டிய அவசியமில்லை..

ஆணாதிக்க அடிமைத்துவம் நிறையவே வரலாற்றில் உள்ளது

குறிப்பு :The usborne book of scientists என்ற நூல் ஆணாதிக்க கொடுமையால் மறைக்கப்பட்ட பெண் விஞ்ஞானிகளை பற்றிய செய்தியை மட்டுமே தொகுக்கப்பட்ட புத்தகம். .

இதுல மதம் தான் இழிவுபடுத்துகிறது என்று வெற்றுக்கூச்சல் வேறு....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.