05/07/2018

விவசாயிகளே மறவாதீர்...


தற்போது 20 இலட்சத்திற்கும் அதிகமான விவசாய பம்ப் செட்டுக்கள் கட்டணமில்லாமல் இயங்க 64 பேர் காவல்துறையின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானதே காரணம்.

64 உத்தம தியாகிகளின் நினைவாக ஒவ்வொரு வருடமும் ஜூலை 5 ம் தேதி உழவர் தினமாக அனுசரிக்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த வருடம் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பாக ஜூலை 5 ம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு கோவை மாவட்டம் சூலூரில் மாபெரும் உழவர் தினப்பேரணி மற்றும் கோரிக்கை மாநாடு நடைபெறுகின்றது.

தனது இன்னுயிரை இழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கட்டணமில்லா மின்சாரம் பெற்று பயன்பெறுகின்ற அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

மாலை 3 மணிக்கு பல்லடம் அய்யம்பாளையத்தில் உள்ள தியாகிகளின் நினைவு ஸ்தூபியில் அஞ்சலி செலுத்தப்படுகின்றது.

அதன்பின்னர் மாலை 6 மணிக்கு பேரணி மற்றும் கோரிக்கை மாநாடு சூலூரில் நடைபெறுகின்றது.

இடம் : அண்ணா சீரணி கலை அரங்கம். சூலூர்.

விவசாயிகளே அனைவரும் வாரீர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.