05/07/2018

மந்திரங்களும் உண்மைகளும்...


மந்திரங்கள் சாமானிய மக்களுக்கு அப்பாற்பட்ட சொல்லாகவே மந்திரங்கள் இருந்து வருகிறது, அது மட்டுமின்றி பகுத்தறிவு என்ற பெயரில் நமது அரசியல்வாதிகள் நமது இந்து மதத்தில் இருக்கும் அறிவியல் ரீதியான அற்புதங்களை அழிக்கும் பணியை மிக அழகாக செய்து கொண்டே இருக்கின்றனர்.

எல்லோர் மனதிலும் எழும் கேள்வி மந்திரங்கள் உண்மையா..?

மந்திரங்களினால் பலன் உண்டா என்றே காரணம் மந்திரங்கள் என்ற உடன் நினைவுக்கு வரும் ஒரு கேள்வி..?

மந்திரத்தால் மாங்காய் விழுமா என்ற கேள்வி தான், அதற்க்கு முன் இந்த மந்திரம் ஒலி குறித்து சில விஷயங்களை காண்போம்..

மந்திரம் என்பது குறிப்பிட்ட ஒன்றின் மீது மனதை நிலைபடுத்துவது மந்திரம்.

மந்திரங்கள் பொதுவாகவே ஒலி வடிவம் உடையவை ஒலி எங்கும் செல்ல கூடியது எங்கும் பரவி நிர்க்க கூடியது. நாம் காதுகலால் கேட்க முடியாத ஒலிகள் அதிர்வுகளாக எங்கும் பரவி இருக்கிறது, கோவில்களில் இருக்கும் ஒரு வித அமைதியும் சுகமான நிலையுமே இதற்கு சான்று.

கூட்டமில்லாத சாதாரண நாட்களில் தரிசனம் செய்து விட்டு கோவிலில் அமர்ந்து அந்த அதிர்வுகளை அனுபவிக்கலாம். அப்படிப்பட்ட சக்தியை உடைய ஒலியை குறிப்பிட்ட அளவில் நமக்கு எது தேவையோ அதை இந்த மந்திரங்கள் ஈர்க்க முடியும் இது நிஜம்.

முன்பே சொன்னது போல இந்த உலகம் முழுக்க எண்ண அதிர்வுகள் நிரம்பி இருக்கின்றது, ஒரு சூதாடி இன்னொருவனை நோக்கி ஈர்க்கப்படுவதை போல ஒரு இசைக் கலைஞன் இன்னொருவனை நோக்கி ஈர்க்க படுவதை போல ஏனென்றால் அவர்கள் இருவரது எண்ண அலையும் ஒரே அலைவரிசையில் இருக்கிறது. அவ்வளவே இது ஒரு சிறிய உதாரணம்..

அதை போல இந்த மந்திரங்கள் உங்களுக்கு தேவையான மாற்றங்களை கொண்டு வரும், சமீபத்தில் ஒரு ஆராய்ச்சியில் ஓம் என்ற மந்திரத்தை கேட்க வைப்பதன் மூலம் மன நோயாளிகள் நல்ல முன்னேற்றம் கண்டதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

அதிர்வுகளை பற்றி அலைவரிசை பற்றி கண்டோம் இப்பொழுது சொற்களை பற்றி காண்போம்..

தமிழகத்தின் தென் பகுதியில் ஒரு முது மொழி உண்டு ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும் நாம் எப்படி சொர்க்களை பயன்படுத்துகின்றோம் என்பதை பொறுத்து இருக்கிறது.

வெறும் சொற்கள் தானே என நினைப்பவர்களுக்கு அவை முதலில் சாதாரணமாக தொடங்கி பின் பெரும் வலிமையான ஒன்றாக தங்கள் வாழ்வில் மாறிவிடும்.

உதாரணமாக கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கும் மாணவனிடம் தொடர்ந்து நீ ஏன் இப்பொழுது தவறாக கணிதம் போடுகிறார் என பல முறை கூறுவீர்களெனில் அவனது ஆழ் மனம் அதை முழுமையாக ஏற்று கொண்டு அவன் தவறாக கணிதம் போடுவதில் வல்லவனாக இருப்பான்.

சில திருதலங்களுக்கு செல்ல வேண்டும் என நாம் என்ன முயன்றாலும், இயலாது ஆனால் திடீரென ஒரு நண்பர் வருவார் வாருங்கள் சென்று வரலாம் என்று கூறி மிக எளிதாக அந்த தளத்திர்க்கு செல்லும் விருப்பும் நிறைவேறும் இது தான் பிராப்தி, சில மந்திரங்களை காதார கேட்டு மகிழவும் இந்த பிராப்தி தேவை..

மந்திரங்கள் என்றாலே ஏதோ மாய வித்தை என்ற நிலைக்கு நம் மக்கள் தள்ளப்பட்டு விட்டனர். முன்பு அநேகமாக இன்றும் சில பகுதிகளில் மந்திரவாதிகள் என சிலரை காண முடியும் பில்லி சூனியம் செய்வினை வைப்பது எடுப்பது போன்றவைகளை செய்பவர்கள் மந்திரங்களை ஒரு சூனிய நிலைக்கு கொண்டு சென்று விட்டனர்.

வேத மந்திரங்களோ சரியான அணுகுமுறை மற்றும் ஆர்வமின்மையின்மையால் பொதுஜன பார்வைக்கு அப்பால் சென்று விட்டது.

மாற்று மத அன்பர்கள் ஒரு குறிப்பிட்ட மந்திர மொழி பெயர்ப்பை படித்து அதனை மேற்கோள் காட்டும் போது அது சரியா தவறா என நாம் உணர முடியா நிலைக்கு நாம் தள்ளபட்டுள்ளோம்.

அதற்கு நமது வேதங்களையும் பதிகங்களையும் படிப்பதும் அவற்றை தொடர்ந்து நமது வாழ்வில் பயன்படுத்துவதன் மூலமும் எண்ணற்ற பயன்களையும் நமது பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றை விடாது காக்கும் பணியினையும் நாம் செய்ய முடியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.