28/07/2018

மூலாதாரம்...


மூலாதாரம் என்பது முதுகெலும்பு முடியும் இடத்தில் உள்ளது.

இந்த சக்கரம் எருவாய்க்கு (குதம்) இரண்டு விரல் கட்டை மேலும் கருவாய்க்கு (குறி) இரண்டு விரல் கட்டைக்கு கீழேயும் உள்ளது.

இதுவே முதல் ஆதாரமாகவும் எல்லா ஆதாரங்களுக்கு அடிப்படை முதல் ஆதாரமாக இருப்பதோடு குண்டலினி என்ற பிரம்ம சக்தி கேந்திரமாகவும், (பிராணன் , நாதம் , ஹம்சம் ) என்ற பிராண மந்திரமும் தோன்றும் இடம் என்றும் முடுகுதண்டின் (எலும்பின் ) கீழும் அமைந்த விடமாகும்.

பஞ்ச ( ஐம் பூதங்களில்) ஒன்றான மண் , (லம்) பிரித்வி , இதன் நிறம் மஞ்சள் . இதன் அதி தேவதை மஹா கணபதியாக இருப்பதால் பிரணவ சப்தமாகவும் ஓங்கார வடிவமாகவும் , ஓங்கார உற்பத்தி தலமாகவும் விளங்குகிறது.

இந்த மூலாதார சக்கரத்திற்கு வடிவம் வட்டத்தின் உள் அமைந்த முக்கோணமும் அதன் நடுவில் நான்கு இதழ்களும், அந்த இதழ்களில் ஒவ்வொன்றிலும் வல வரிசையாக
மனம் ,
புத்தி,
சித்தம் ,
அஹங்காரம் ,
வ , ச ,ஷ, ஸ ,
என்ற நான்கு அக்ஷரங்களும் , நான்கு தத்துவங்களாக இடம் பெற்று உள்ளன.

இங்கிருந்து சுழுமுனை என்ற " ஒலி" மற்றும் "ஒளி" வடிவமான நாடி புறப்பட்டு முதுகுத்தண்டின் வழியே முகுளம் என்ற உறுப்பு வழியே கபாலம் அடைகிறது
என சித்தர்கள் கூறுகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.