28/07/2018

ஆயுர்வேத மருத்துவம்...


ஆயுர்வேத மருத்துவத்தில் நீரிழிவு, சளி, இருமல் மற்றும் ஜலதோஷம் போன்றவற்றிற்கு எந்த மூலிகைகளை பயன்படுத்தினால் நல்லது என்பதைப் பற்றி பார்ப்போமா...

நீரிழிவிற்கு...

கறிவேப்பிலை: உணவுகள் அனைத்திலும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு பொருள் தான் கறிவேப்பிலை. அத்தகைய கறிவேப்பிலை ஒரு சூப்பரான மருத்துவகுணம் கொண்டது. அதிலும் நீரிழிவிற்கு நல்லது. ஆகவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மூன்று மாதம் தினமும் 8-10 இலைகளை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், உடல் எடையையும் குறைத்துவிடும்.

இலவங்கப்பட்டை: இது பெரும்பாலும் பிரியாணிக்கு பயன்படுத்துவார்கள். இத்தகைய இலவங்கப்பட்டையை தினமுத் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு குறைந்துவிடும். மேலும் சில காரத்திற்கு பயன்படுத்தும் உணவுப் பொருட்களான பே இலைகள், மஞ்சள் மற்றும கிராம்பு போன்றவையும் நீரிழிவை சரிசெய்யும்.

நெல்லிக்காய்: நெல்லிக்காய் சாப்பிட்டால், கூந்தல் நன்கு வளரும் என்று அனைவருக்கும் தெரிந்தது. அத்தகைய நெல்லிக்காய் ஒரு சிறந்த மூலிகைப்பொருள். இதனால் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். அதற்கு இந்த நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாகற்காய் ஜூஸ் உடன் கலந்தும் சாப்பிடலாம். மேலும் இந்த நெல்லிக்காயை தொடர்ந்து 2-3 மாதத்திற்கு சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

இருமல் மற்றும் சளிக்கு...

துளசி: உடலில் அதிக குளிர்ச்சியின் காரணமாக வரும் சளி மற்றும் இருமல் போன்றவற்றிற்கு துளசி இலைகளை பச்சையாகவோ, ஜூஸ் அல்லது துளசி டீ-யாகவோ செய்து சாப்பிட்டால், நல்லது.

இஞ்சி: சளி மற்றும் இருமலுக்கு இஞ்சி மற்றொரு சிறந்த மூலிகைப் பொருள். ஆகவே சளி அல்லது இருமல் ஏற்படும் போது ஒரு துண்டு இஞ்சியை தேனுடன் தொட்டு சாப்பிடலாம். இல்லையெனில் அதனை இஞ்சி டீ போட்டும் குடிக்கலாம்.

ஏலக்காய்: உணவுகளில் நறுமணத்திற்கு சேர்க்கும் ஏலக்காயும், சளி மற்றும் இருமலுக்கு சிறந்தது. ஆகவே இதனை டீ செய்து குடித்தால், இருமலால் தொண்டையில் ஏற்படும் அரிப்பு நீங்கும்.

எலுமிச்சை: வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் விட்டு கலந்து குடித்தால், சளி மற்றும் இருமல் சரியாகும். இதனை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.