23/08/2018

திமுக கருணாநிதி பூர்வீகம் ஆந்திராவில் ஓங்கோல்...


படத்திலுள்ள தெலுங்கு பத்திரிக்கை செய்தியின் சுருக்கம் கீழே...

கருணாநிதி முன்னோர்கள் ஓங்கோலைச் சேர்ந்தோர்..

கலைஞர் கருணாநிதியின் மூதாதையர்களின் சொந்த ஊர், ஆந்திராவில் , ஒங்கோலுக்கு அருகே உள்ள செருக்கொம்முபாளையம் என்ற ஊர்.

கருணாநிதியின் மூதாதையர்கள், ஒங்கோலுக்கு அருகே உள்ள பெள்ளூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான பாடகர்கள் ஆக இருந்தார்களாம்.

இதை கருணாநிதியே 1960 ல் ஒங்கோல் சென்றிருந்த போது கூறியுள்ளார்.

கருணாநிதி 1960ல் எலூர் நகரத்தில் நடந்த நாவல் வெளியீடு விழாவில் பங்கேற்று அங்கு வந்த ஓங்கோல் நகரை சேர்ந்த கொம்பள்ளி பாலகிருஷ்ணாவை சந்தித்துள்ளார்.

அவரிடம் கருணாநிதி தன் பூர்விகம் பற்றி கூறியுள்ளார்.

இதை பாலகிருஷ்ணா தாம் பணிபுரிந்த கல்லூரி விழாவில் கூறியுள்ளார்.

தற்போது அவரும் மறைந்து விட்டார்.

ஆனால் அன்று தெரிவித்தவற்றை அவர் மாணவர்கள் வெளியிட்டு உள்ளார்கள்.

சமஸ்தான பணி சரியாக இல்லை என்பதால் அவர் முன்னோர்கள் மதராஸ் வந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார் கருணாநிதி.

இதிலிருந்து இவர்கள் விஜயநகர ஆட்சி காலத்தில் வந்தவர்கள் அல்லர் என்பதும் கிபி 1800 க்கு பின்பு வந்தவர்கள் என்பது தெளிவாகிறது.

கருணாநிதிக்கு இரு தலைமுறை முன்பு அவர் முன்னோர்கள் ஓங்கோல் பகுதியில் வசித்து வந்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.