08/08/2018

திமுக கருணாநிதியே அள்ளி இடுகிறோம் கொள்ளி...


ஈழத் தமிழா இரங்காதே புறம் தள்ளி அறம் பாடு
மானத் தமிழினம் ஈனச் சிறை யிருந்து
ஈகப் போராடி ஏற்றிய வீரக் கொடியதனை
ஈனப் பிறவி கூடி அறுத்தானே
குல வேரோடு மீண்ட தமிழீழத்தின்
ஆண்ட பரம்பரையின் மாழாத் தீரத்தை

கொடும் மழை அளவு கண்ணீர்
வங்கக் கடல் சிவந்த குருதி
மலை யளவு பிணங்கள்
ஏறத் தள்ளி எரித்து
எள்ளி நகை செய்தும்
ஏசிக் காற்று வாங்கி கிடந்தானே
கடற் கரையில் கட்டு மரம்

அபயம் அபயம் என
ஈழத் தமிழரின் ஓலம் கேட்டும்
மௌனம் காத்த மெரீனாவே
மாடு பிடிக்கத்தான்
நீ பேரலை கொண்டெழுவாயா

மானப் போர் வென்று வீரச் சமர் கூட்டி
ஈகம் தந்த லெட்சம் உறவுகள்
உயிரெனத் தெரியலையா
தமிழ் குலக் கொடி வேந்தரென அறியலையா
தேடிய விடிவெங்கே சுய உரிமை நிலை எங்கே
முடிவின்றி மூழ்கிய முகாரி தானே அங்கே

வித்தகரே வீண் விரையம் கொள்ளாதீர்
தேசியத் தமிழினத் தலைவன்
தெய்வம் ஆனான் தெரியாதோ

ஏசி காற்றும் சூரியக் கண்ணாடியும்
காலமுக்க உறவும் காவலுக்கு காவலரும்
மெரினாவில் அன்று அன்றலர்ந்த காட்ச்சி 
கலைஞனின் சின்னத் திரை சீரியல் தானே
போதுமடா சாமி போயிடு போயிடு

இரங்காது நெஞ்சு தாங்காது பூமி
தமிழீழம் என்றோ பிறந்திருந்தால்
உன் பெயரையும் பொன்னெழுத்தில் மின்ன
வண்ணம் தீட்டி வாசலிலே வைத்திருப்போம்
கண்ணிழந்த கபோதியே
களம் ஆடி வென்ற தமிழீழக் கனியை இழந்தோமடா உன்னால்
வெறுங் கையில் முழம் போட்டு
முகத் துதி பாடமாட்டோம்
அகத்தின் அனலில் அள்ளி இடுகிறோம்
கொள்ளி
பிடி சாம்பலும் மிஞ்சாது உன் மேனி

- பாவலர் வல்வை சுயேன்...

குறிப்பு : ஈழத்தில் தமிழர்கள் வெடி வெடித்து கொண்டாடினர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.