08/08/2018

M SAND: என்பது பற்றி இன்று அறிந்து கொள்வோம்...


Manufactured Sand என்பது தான் எம் சாண்ட் என அழைக்கப் படுகிறது. இது கட்டுமான தொழிலில் ஆற்று மணலுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் செயற்கை மணல் ஆகும்.

இந்த எம் சாண்ட் கடினமான கருங்கற்களை இயந்திரங்கள் மூலம் தூள் தூளாக அரைத்து உற்பத்தி செய்யப் படுகிறது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் எம் சாண்ட் எனும் செயற்கை மணலைக் கொண்டு தான் பெரும்பாலான கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் பெரும்பாலாக ஆற்று மணல் வைத்தே கட்டடம் கட்டப் படுகிறது.

ஆற்று மணலை விட குறைந்த குறைபாடுகளும், அதிக வலிமையும், குறைந்த விலையும், சூழியலுக்கு உகந்ததாக எம் சாண்ட் மணல் உள்ளது. இதனால் கட்டுமானச் செலவு குறைகிறது. எம். சாண்ட் எனும் செயற்கை மணல் பெருமளவில் பயன்படுத்துவதால், ஆற்று மணல் அள்ளப்படுவது பெருமளவில் குறையும். எனவே ஆறுகளின் கரையோரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரக் கூடும்.

நமது வீடுகளுக்கும், கட்டிடங்களுக்கும்  எம் சாண்ட் எனும் செயற்கை மணலை பயன்படுத்தலாமே.. ஆற்று மணலை தவிர்ப்போம்..

நாம் ஆற்று மணலைத் தவிர்த்தாலே நாளடைவில் ஆற்று மணல் கொள்ளை அடிக்கப் படுவது குறைந்து விடும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.