08/08/2018

மூலக்கனல்...


ஞானிகளது உடம்பில் மூலக்கனல் மிகுந்தால் சுக்கிலம் வெளியாகாமல் உள்ளேயே தங்கிவிடும்.

அங்கிமி காமாவைத் தானுடல் வைத்தான்
எங்குமி காமாவைத் தானுல கோழையுந்
தங்கமி காமாவைத் தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமைவைத் தான்பொருள் தானுமே.

-திருமந்திரம் - திருமூலர் வரலாறு - கவி எண் 87..

இங்கு திருமூலர் “தங்கமி காமாவைத் தமிழ்ச் சாத்திரம்” என்கிறார்.

எந்த ஒரு சாத்திரமும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் பொருளை விளக்கமாகச் சொல்லாது என்றும், பொங்கி மிகாமை வைத்தான் எனப் பொருள் கூறுவது சம்பிரதாய இரகசியமாகும்.

ஒரு மனிதன் பெண்போகம் கொள்ளாமல் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் அவனுள் சுக்கிலமானது தானே வெளியாகிவிடும்.

ஆனால், ஞானிகளுக்கு ஆசான் ஆசியால் அவ்வாறு வெளியேறாது. உடம்பினுள்ளேயே தங்கி உடம்போடு கலந்துவிடும் எனக் கூறுகிறார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.