தமிழகம் அறிந்த ஒரு மனித உரிமை அரசியல் செயல்பாட்டாளரான திருமுருகன் காந்தியை அழைத்து வருவதற்கு, ஒரு பயங்கரவாதியை அழைத்து வருவதைப் போன்று 10க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான காவல்துறையினர் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
ஒரு மனித உரிமை செயல்பாட்டாளரை அழைத்து வருவதற்கு எதற்கு இத்தனை காவல்துறையினர் வரவேண்டியுள்ளது என்பது இயக்கத் தோழர்களாகிய எங்களுக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.
பெங்களூரிலிருந்து புறப்பட்ட அடுத்த விநாடியிலிருந்து எங்கள் ஒருங்கிணைப்பாளரின் பாதுகாப்பு என்பது தமிழ்நாடு அரசின் கையில் உள்ளது என்பதனை தெரியப்படுத்த விரும்புகிறோம். எங்கள் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ எந்த பாதிப்பு நிகழ்ந்தாலும் அதன் முழுப்பொறுப்பு தமிழ்நாடு அரசினையும், காவல்துறையினையுமே சாரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைத்து ஜனநாயக சக்திகள், பொதுமக்களிடம் இதனை நாங்கள் வெளிப்படையாக ஜனநாயகப்பூர்வமாக முன்வைக்கிறோம். இந்த செய்தியினை அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- மே பதினேழு இயக்கம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.