10/08/2018

திமுகவும் அதிமுகவும் எதிரெதிர் கட்சிகளாம்...


டாஸ்மாக் தொடங்கி
அல்லோபதி
மெக்காலே கல்வி
பசுமை புரட்சி
பன்னாட்டு முதலீடு
காவேரி விவகாரம்
இயற்கை வள பாதுகாப்பு
இலவசங்கள்
சாதி பார்த்து தொகுதிக்கு ஆள் நிறுத்துவது,
கடையடைப்பு
தீக்குளிப்பு

என எதை எடுத்தாலும்.. கொள்கை முடிவுகளும், அனுகுமுறைகளும் ஏறத்தாழ ஒரே மாதிரிதான் இருக்கும்..

உண்மையில் இவை இரண்டல்ல, இரண்டும் ஒன்றுதாம்.

சுடுகாட்டிற்கு கூட்டிச்செல்லும் இரு வெவ்வேறு பாதைகள்.

ஒன்று கரடு முரடாக இருக்கும்.
ஒன்று மெண்மையானது.

ஆனால் நீங்கள் அழைத்து செல்லப்படுவது என்னவோ நரகத்திற்குதான்.

தேர்ந்தெடுத்த பாதைகளை பொறுத்து பயணம் முறை மாறும். போய் சேரும் இடமோ?

ஒன்று தமிழை தூக்கி பிடித்தது
மற்றொன்று தனி நபரை தூக்கி பிடித்தது.

ஒருவர் தமிழ்பாடிக்கொண்டே நரகம் செல்வார் , மற்றவர் தனி நபர் புகழ்பாடி நரகம் செல்வார்.

இருவரும் சொர்க்கம் செல்லபோவதில்லை...

இயற்கை vs செயற்கை என்றால்தான் அது எதிரெதிர்.

இரண்டுமே செயற்கை என்பது எப்படி எதிரெதிர் ஆகும்.

டாஸ்மாக் vs கள்ளு
அல்லோபதி vs மரபு மருத்துவம்
மெக்காலே vs மரபு கல்வி
பசுமை புரட்சி vs மரபு விவசாயம்
பன்னாட்டு முதலீடு vs தற்சார்பு
இலவசம் vs சுயசார்பு

எந்த ஒரு கட்சி இப்படி பேசுகிறதோ அதுவே கொள்கைசார் எதிர்கட்சி.

மற்றவை எல்லாம் பதவி ஆசைக்காக நாற்காலி சண்டையிடும் நாலாங்கரைகளே..

முதலில் திமுகவும் அதிமுகவும் எதிரிகள் என்ற மாயையிலிருந்து வெளிவாருங்கள்.

நம்ம கதைக்கு வருவோம்...

திராவிட துரோகங்கள் என்ற பதிவுல திராவிட ஆட்சியில. நமக்கு முதுகுல குத்தபபட்ட கத்திகளை பட்டியலிட்டோம் அதை எதுக்கும் நினைவுக்கூறுங்க..

இத்தனை துரோகங்களையும் நம்ம ஒரே நாள்ல மறக்குற அளவுக்கும், ஒரு நாள் நம்ம வாயாலயே அவரை புகழ வைப்பதிலுமே இருக்குது ஊடகங்களோட வெற்றி..

முதல்ல உங்க சிந்தனையை உங்களுக்கு அடிமையா வைங்க, பிறகு அரசியல் பேசலாம்..

உலக அரசியல் முன் ஆட்சியாளர் அனைவரும் துரோகிகளே இந்த புரிதலுக்கு முதல்ல வாங்க..

ஆனா இடையில இடையில நம்ம மனசே கலங்குற அளவுக்கு செய்தி சேனல் இறுதி ஊர்வலத்தை போட்டுவிடுறான்
சும்மாவா சொன்னாங்க இசை ஒரு சாத்தான்னு..

துரோகங்களை நீங்கள் நினைவு கூறுவீர்களானால் உங்க நாளைய தலைமுறை பிழைச்சிக்கும்.

இப்படி ஒரே நாள்ல உங்க மனம் மாறுனா நாளை உங்க அடுத்த தலைமுறையும் உணர்ச்சிக்கு அடிமையாகி கண்ணுக்கே தெரியாமல் முதுகில் வீசப்படும் கத்தி போல துரோகத்தால வீழ்த்தப்பட்டு
வணிகனின் அடிமையாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.