29/09/2018

சென்னையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் 4 ஐம்பொன் சிலைகள் உட்பட 60 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்...


சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் குடியிருப்பவர் ரன்வீர் ஷா. ஆடை நிறுவனம் நடத்தி வரும் இவர் முபையை சேர்ந்தவர். இவர் வீட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது போலியான ஆவணங்கள் சமர்ப்பித்துள்ளார் என்று தெரிகிறது. அதுமட்டுமின்றி 300 சிலைகள் கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்நிலையில் சிலை கடத்தல் தொடர்பாக தீனதயாளன் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தீனதயாளன் ரன்வீர் ஷாவிடம் சிலைகளை கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரன்வீர்சிங்கின் வீட்டில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனையில் 4 ஐம்பொன் சிலைகள் உட்பட 60 சிலைகள் ஆவணங்களின்றி இருந்ததால் கைப்பற்றியுள்ளனர். ரன்வீர் ஷா தற்போது வீட்டில் இல்லை என்று தெரிகிறது.

கைப்பற்றப்பட்ட சிலைகள் நூற்றாண்டு பழமைமிக்கவை என்றும் பல்வேறு கோயில்களை சேர்ந்தவை என்றும் தெரியவந்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.