07/09/2018

தமிழின விரோத பாஜக அடிமை ஊழல் அதிமுக அரசு லட்சனம்...


முதல்வரின் சொந்தக்காரர் வீட்டில் சோதனை; பெரும்பாலான அமைச்சர்கள் வீடுகளில் சோதனை; மாநில தலைமைசெயலகத்தில் சோதனை; மாநில டிஜிபி அலுவலகத்தில் சோதனை; தலைமை செயலாளர் முதல் டிஜிபி வரை மாநிலத்தின் பெரிய பெரிய அதிகாரிகள் அலுவலகங்கள் வீடுகளில் எல்லாம் சோதனை மேல் சோதனை.

ஒட்டுமொத்த இந்தியாவிலும் கேடுகெட்ட ஆட்சி நடக்கும் மாநிலம் எது? என்று கேட்டால் எந்த தயக்கமும் இல்லாமல் தமிழ்நாடு என்று தைரியமாக சொல்லும் நிலைமை தான் நிலவுகிறது. கேவலமான ஆளும் கட்சி எது என்று கேட்டால் அதிமுக என்று அந்தகட்சிக்காரர்களே கூட தனிப்பட்ட உரையாடல்களில் ஒத்துக் கொள்கிறார்கள்.

இத்தனைக்குப்பின்னும் தொடர்புடையவர்கள் யாரும் பதவி விலகவில்லை; சிறைக்கு செல்லவில்லை. ஆட்சி அமோகமாய் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதுவும் முதல்வர் குஷியாக டென்னிஸ் ஆடுகிறார். உற்சாகத்தோடு உடற்பயிற்சி செய்கிறார். அந்த படங்கள் ஊடக பக்கங்களின் முதல் பக்கத்தில் வருகின்றன. அவர் தான் குலசாமி என தமிழக அரசு பொதுமக்கள் வரிப்பணத்தில் விளம்பர படம் எடுத்து திரையரங்குகளில் ஒளிபரப்புகிறது. எந்த கூச்சமும் இல்லாமல். பொதுமக்களும் எந்த கோபமும் படாமல் அனைத்தையும் கடந்துபோகிறார்கள்.

இந்தபக்கம் சமூக ஊடகங்களோ ஐபிஎல்லுக்கு எதிராக ஒருநாளும் அபிராமிகளுக்கு ஆதரவாக மறுநாளும் சொந்த கட்சிக்குள்ளேயே செல்வாக்கில்லாத தமிழிசைக்கு எதிராக மூன்றாம் நாளுமென பொங்கி அடங்கி மீண்டும் பொங்கி தினம் ஒரு பொங்கல் வைத்து தனக்குத்தானே பூரித்துக் கொண்டிருக்கிறது.

உண்மையில் ஒட்டுமொத்த ‭தமிழ்நாடும் கொள்ளைபோய்க்கொண்டிருக்கிறது. இந்திய ஒன்றிய அரசோ ஏறி மிதித்து துவம்சம் செய்கிறது. மற்ற மாநிலத்தவர் காறி துப்புகிறார்கள். நம் கவனம் செலுத்த வேண்டிய இடத்தையும் இலக்கையும் நாமே இழந்ததால்/தொலைத்ததால்தான் இந்த நட்டாற்றில் வந்து கூட்டாக நிற்கிறோம் என்பதே புரியாமல் நாமும் கொஞ்சம் கொஞ்சமாய் மூழ்கிக் கொண்டிருக்கிறோம்.

தனிநபர் தற்கொலைகளைப்போல சமூக தற்கொலைகள் சட்டென நடந்து விடுவதில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.