காண்பார்வை அற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்த சோழர் அரசாணை.
இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு இட ஒதுக்கீடு மூலம் வேலைவாய்ப்பு வழங்குகிறது.
ஆனால் 800 ஆண்டுகளுக்கு முன்பே சோழ அரசாங்கத்தால் இது நடை முறைப் படுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள திருவாமாத்தூரில் உள்ள "அபிராமேசுவரர் கோவில்" கல்வெட்டில் இருந்து இந்த தகவலை தெரிந்து கொள்ள முடிகிறது.
இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் இக்கோவிலில் திருப்பதிகங்கள் பாடுவதற்கு 16 பார்வையற்றவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் கோவிலுக்கு வந்து செல்வதற்கு உதவியாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரையும் "கண் காட்டுவார்" எனக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இந்த பதினெட்டு பேருக்கும் (அக்கால வழக்கப்படி) ஊதியமாக நெல் வழங்கப்பட்டு உள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.