சின்மயி 15 ஆண்டுகளுக்க முன்பு நடந்த சம்பவங்களை கூறிய நிலையில் இவர் 22 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்லியிருக்கிறார்.
ஒரு விளம்பர பாடல் ஒன்றை பாட சென்னை ரங்கராஜபுரத்தில் உள்ள ஸ்டுடியோ ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கிருந்த வைரமுத்து, உங்கள் குரல் இனிமையாக உள்ளது…பாடி முடித்துவிட்டு தன்னை பார்க்கும்படி கூறினார். இதைத் தொடர்ந்து அவரிடம் பேசிவிட்டு போன் நம்பரை பரிமாறிக் கொண்டோம்.
பின்னர் அடிக்கடி போனில் தொடர்பு கொண்ட வைரமுத்து, இசையமைப்பாளர் ரஹ்மானிடம் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறினார். ஒரு கட்டத்தில், அறிவுப் பூர்வமான ஒரு பெண்ணை தேடிக் கொண்டிருந்தேன்…என் தேடல் உன்னில் முடிந்து விடுமோ என்று நினைக்கிறேன் என காதல் வலை வீசினார். ஆனால் நான் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டேன்.
அடுத்த நாள் என்னை அழைத்து, உன் கண்கள் என்ன கூர்வாளா… என் கவிதையே துண்டு துண்டாகி உன் காலடியில் விழுந்து கிடக்கிறதே என மீண்டும் வலை வீசினார். அப்போதும் நான் மறுத்துவிட்டேன். பின்னர் மலேஷியாவில் விருது வழங்கும் விழா ஒன்று நடக்க உள்ளது. அதற்கு வருகிறாயா என கேட்டார்.
அதற்கு நான் பாடவா ? அல்லது தொகுத்து வழங்கவா ? என கேட்டேன்.அதற்கு வைரமுத்து இரண்டும் இல்லை என்றார. அவரது எண்ணத்தை நான் புரிந்து கொண்டதால் நான் மறுத்துவிட்டேன். அதன் பிறகு பல முறை என்னை தொடர்பு கொண்டு மலேஷியா வருகிறாயா என கேட்டு தொந்தரவு செய்தார். ஆனால் நான் கடுமையாக மறுத்து விட்டேன் என்று புவனா பதிவிட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துகிட்டா லைஃப்ல அழகாக செட்டில் ஆகிவிடலாம் என கவிஞர் வைரமுத்து ஆசை வார்த்தை காட்டினார். ஆனால் தொடர்ந்து நான் கடுமையாக மறுத்துவிட்டதால் என்னை மிரட்டத் தொடங்கினார். உனக்கு இனிமேல் எந்த வாய்ப்பும் இலலாமல் செய்தவிடுவேன்… என் செல்வாக்கு தெரியுமா ? என பல வகைகளில் தொந்தரவு கொடுத்தார்.
அவர் சொன்னதுபோலவே செய்தும் காண்பித்தார்…நல்ல குரல் வளம் இருந்தும் எனக்கு பாட வந்த வாய்ப்புகளை எல்லாம் கிடைக்கவிடாமல் செய்தார்.
இதனால் நொந்துபோன நான் அழுதேன். பின்னர் வேறு வேலைக்கு சென்றுவிட்டேன். என்னுடைய பாடும் கனவை முற்றிலுமாக தகர்த்து எறிந்தவர் வைரமுத்துன் என திட்டவட்டமாக தெரிவித்தார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.