03/01/2019

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


இஸ்ரேலிய பாலைவனத்தில் ஒரு கைவிடப்பட்ட தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் மிக அரிதான ஓவியம் என நம்பப்படுவதை, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் அடையாளம் கண்டுள்ளனர்.

இயேசுவின் மிக அரிதான இந்த கலை சித்தரிப்பு இஸ்ரேலின் தெற்கே பெரிய நெகேவ் பாலைவனத்தின் இதயத்தில் உள்ள பைசாண்டீன் விவசாய கிராமமான சிவாடாவின் பழமையான தேவாலய அழிவில் காணப்படுகிறது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் முதலில் சிதைந்த தேவாலயங்களை தான் கவனித்தனர். ஆனால் சுவரோவியங்களைக் கவனிக்கவில்லை என்று தெரிகிறது.
சரியான நேரத்தில்,சரியான வெளிச்சத்தில், திடீரென்று பரிசுத்தரின் கண்களைக் கண்டனர். " அவருடைய ஞானஸ்நானத்தில் முகம் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தது."

துண்டு துண்டான ஓவியமானது ஆறாவது நூற்றாண்டிற்கு முற்பட்டது. இயேசு கிறிஸ்துவின் முகபாட்டு, ஒரு இளம் மனிதனாக குறுகிய முடிகளுடன் வெளிப்படுத்தியதாக ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். இயேசுவின் இந்த ஓவியமானது 1920 களில் முதன்முதலில் காணப்பட்டது, மேலும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இப்போது மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பிப்ரவரி 2018 ல், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், விவிலிய நபி ஏசாயாவின் 'கையெழுத்து' கையொப்பத்தை தாங்கிய ஒரு களிமண் முத்திரையும் கண்டுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.