03/01/2019

சுதந்திரம்...


நீ எதிலிருந்து விடுபட நினைக்கிறாயோ அவற்றுடனெல்லாம் நீ மேலும் பந்தப்படுவாய்.

ஏனெனில் சுதந்திரம் என்பது எதற்கும் எதிரானதல்ல.

சுதந்திரம் என்பது எதனிடமிருந்தோ அல்லது எதற்காகவோ அல்ல.

சுதந்திரம் என்பது எதனுடனும் உடன்படுவதுமல்ல.

சுதந்திரம் என்பது கடந்து செல்வது.

உடன்பாடு, எதிர்மமறை இரண்டையும் கடந்து செல்வது.

சுதந்திரம் என்பது இருமைத் தன்மையிலிருந்து விடுதலை.

அங்கு உடன்பாடு எதிர்மறை எங்கிருக்கிறது.....?

எதனுடன் சம்பந்தப்படுவது....?

எதை எதிர்ப்பது........?

சம்பந்தம் புத்திசாலித் தனமானதல்ல. எதிர்ப்பும் பழையதோடு சம்பந்தப்பட்டது தான்.

ஆகவே, புரிந்துகொள்-சண்டையிடாதே.

சண்டையிடுவதன் மூலம் யாராவது ஏதாவது அடைந்திருக்கிறார்களா......?

வலியைத் தவிர-தோல்வியைத் தவிர.

ஆகவே, தப்பி ஓடாதே, பதிலாக விழித்துக்கொள்.

தப்பி ஓடுவதனால் ஒருவன் தப்பி ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும்.

அதற்கு முடிவு இல்லை.

அறிதலே சுதந்திரம். பயமல்ல, கோபமல்ல, பகையல்ல, எதிர்ப்பல்ல.

அறிதல் மட்டுமே சுதந்திரம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.