30/07/2020

ENVIRONMENTAL IMPACT ASSESSMENT 2020... சூழலியல் தாக்க மதிப்பீடு (EIA) என்றால் என்ன?



சுரங்கம், தொழிற்சாலைகள், அணை போன்ற தொழில் வளர்ச்சித் திட்டங்களால்,

 ஒரு நாட்டின் சூழலியல் வளங்கள் பலியாகிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்படும்

 முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்
சூழலியல் தாக்க மதிப்பீடு (Environment IMpact Assessment) என்று அழைக்கப்படுகிறது.

சூழலியல் தாக்க மதிப்பீட்டின் நோக்கம் சுற்றுச்சூழலுக்கான தீவினைகளை முன்பே கணித்து அதனைத் தடுப்பதுதான்.

அதற்கு மக்கள் கருத்து, நிபுணர் அறிக்கை, ஆய்வு என பல்வேறு வழிமுறைகளை உள்ளடக்கியுள்ளது இந்தச் சட்டம்.

1994 EIA சட்டத்தின் படி  ஒரு தொழிற்சாலை திறப்பதனால் எதாவது ஆபத்து என தெரியவந்தால் இந்தியாவில் யார் வேணாலும் அதற்கு எதிராக வழக்கு போட உரிமை உண்டு..

2006 EIA சட்டத்தின் படி  எந்த மாவட்டத்தில் தொழிற்சாலை வருகிறதோ அந்த மாவட்டத்தை சேர்ந்தவர் மட்டும் வழக்கு போடும்  உரிமை இருந்தது.

2020 EIA சட்டத்தின் படி  எவ்வளவு பெரிய ஆபத்தான தொழிற்சாலை இந்தியாவில் எங்கு வந்தாலும் யாருக்கும் அதை எதிர்க்க உரிமை இல்லை..

இந்த சட்டத்தின் படி தொழிற்சாலைகளில் எதாவது விபத்து வந்தாலோ அல்லது வேறு எதாவது பேராபத்து வந்தாலும் தொழிற்சாலை நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே புகார் செய்ய உரிமை உண்டு..

எளிமையா சொல்லனும்னா இனிமே எந்த நாசகார திட்டம் உயிர்களை இயற்கை வளங்களை அழிக்குற மாதிரி கொண்டு வந்தாலும் யாருக்கும் எதிர்த்து கேள்வி கேட்கவோ போராடவோ உரிமை இல்லை

இந்த EIA 2020 வரைவு சட்டமானால்  8வழி சாலை, மீத்தேன், கெயில் குழாய் பதிப்பு, ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் போன்ற இன்னும் பிற மனித இனத்திற்கு எதிரான தொழிற்சாலைகள் எந்த தடையும் இன்றி செயல்படும் இனிமேலும் புதிதாக வரும்.

இந்த நாசகார சட்டம்  உறுதியாக நீதிமன்றம் மக்களிடம் கருத்து கேட்கிறது ஆகஸ்ட் 11ம் தேதி கடைசி நாள் கருத்து தெரிவிக்க

 எனவே eia2020-moefcc@gov. in  இந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து சுவாசிக்க சுத்தமான காத்தையும் குடிக்க கொஞ்சமாவது நல்ல தண்ணியும் நாளைய தலைமுறைக்கும் விட்டு செல்வோம்..

வழக்கறிஞர் ப. தசரதன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.