14/09/2020

முருங்கைப் பூ மருத்துவம்...



முருங்கையை உணவிற்கு பயன்படுத்தும் போது பலரும் முருங்கைப் பூவை ஒதுக்குவதுண்டு. ஆனால் அதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இயற்கை நமக்களித்த ஓர் வர பிரசாதம் ‘முருங்கைப் பூ’ என்றே கூறலாம். இதன் மகிமைகளை கீழே காண்போம்.

முருங்கைப் பூவை உணவில் சேர்த்து கொள்வதால் சளி தொந்தரவு நீங்கும்.

மேலும் முருங்கைப் பூ தலைவலியைக் குறைக்கும், கால் வலி, கழுத்து வலியையும் குறைக்கும் தன்மை இந்த பூவுக்கு உண்டு.

முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சுவைக்காக பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பித்தமுள்ளவர்கள் முருங்கைப் பூவை உணவில் அதிகம் எடுத்துகொள்ள வேண்டும். இதனால் உடலில் உள்ள பித்த நீர் குறையும்.

நரம்பை வலிமைப்படுத்தும் தன்மை முருங்கைப்பூவிற்கு உண்டு. தொடர்ந்து முருங்கை பூவை உண்டு வந்தால் நரம்பு தளர்ச்சி முற்றிலும் குணமடையும்.

உடல் சூட்டினை தணிப்பதற்கு முருங்கைப்பூ பயன்படுத்தப்படும். முருங்கைப்பூவை கஷாயமாக்கி சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.

பெண்களின் உதிரப்போக்கு பிரச்சனைக்கு முருங்கைப்பூவை நன்றாக அரைத்து சாப்பிட்டால் உடனடியாக அப்பிரச்சினை அகலும்.

உடலில் உஷ்ணம் அதிகரிப்பதால் ஏற்படும் கண் எரிச்சல், கண்ணீர் நீர் வடிதல் போன்ற கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு முருங்கைப்பூ ஓர் நல்ல மருந்து.

முருங்கையில் உள்ள பூ, காய், வேர், கீரை, பிசின் என அனைத்திலுமே மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே இயற்கை நமக்களித்த இத்தகைய உன்னதமான முருங்கையை நம் எளிதாக வீட்டிலே வளர்த்து பயனடையலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.