03/03/2021

உடலும் உயரமும்...

ஒவ்வொரு மனிதரும் அவரவர் கையின் அளவுப் படி தொண்ணூற்றாறு அங்குல உயரமே என்பர்.

அவரவர் கையின் விரல் பருமன் ஒரு அங்குலம் எனக் கூறப்படும். அங்குலம், சாண், முழம், மார் என்பதும் கையின் அளவைக் கொண்டே கணிக்கப்படும்.

எண் சாண் உடலம் என்பதும், எறும்புக்கும் தன்கையால் எட்டு என்பதும் உடலின் உயரத்தைக் குறித்தே வழங்கப்படும்.

சென்ம சரீ ரந்தொண்ணூற் றாற தென்னச்

செப்புமங் குலமவர்கள் கையாலே தான் - 150 என்பர்..

இந்த உயரத்தின் அளவு என்பது எல்லோருக்கும் பொது என்று உரைக்கப்படுகிறது.

இவ்வாறு, ஒவ்வொரு வரின் உயரமும் ஒத்திருப்பதற்குக் காரணம் என்ன? என்பதற்குச் சித்தர்கள் கூறும் முறை அறிவியல் முறைக்கு ஒத்ததாகவே இருக்கும்.

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்

அக்கிரமத்தே தோன்றும் அவ் யோனியும்

புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்

அக்கிரம் எட்டும் எண்சாண் அது ஆகுமே - 151..

ஆணும் பெண்ணும் கூடும் போது நாடியில் தோன்றும் சுக்கிலம் சுரோணிதம் என்னும் இரண்டும் கலந்து பெண்ணின் கருப்பையில் கருவாக அமையும்.

அக்கரு அமையும் வேளையில், பெண் விடுகின்ற மூச்சுக் காற்று, 12 அங்குல கன அளவு உடம்புக்குள் செல்கிறது.

அதில் 8 அங்குல கன அளவு மட்டும் பெண்ணின் உடலுக்குள் தங்கி விடுகிறது.

மீதமுள்ள நான்கு அங்குல கன அளவுக் காற்று வெளியே வந்து விடுகிறது.

உடம்பில் சேர்ந்த 8 அங்குல கன அளவு காற்று, கருவாக அமைந்த குழந்தையின் உடலாக அமைந்து எட்டுச் சாண் என்ற அளவை அமைக்கிறது என்பது திருமூலர் கண்டறிந்த உயிரியல் முறையாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.